`நம்பிக்கையுடன் இருந்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்' - விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ரவி சாஸ்திரி!



Sponsored



கடந்த 20 ஆண்டுகளில் இருந்த அணியைவிட தற்போதுள்ள அணி வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடுகிறது என இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. ஏற்கெனவே ஒருநாள் போட்டி தொடரை இழந்த நிலையில், தற்போது டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு தொடர்களில் தொடர்ந்து சாதிக்க முடியாததைக் குறிப்பிட்டு இங்கிலாந்து டெஸ்டில் செய்த தவறுகளை சேவாக் முன்னாள் வீரர்கள் சேவாக், கங்குலி உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விராட்கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்தும் விமர்சித்திருந்தார். இதேபோல் முன்னாள் வீரர் சேவாக்கோ, ``நல்ல வெளிநாடுகளுக்கான அணி என்பது, தமது ஆட்டத்தை மைதானத்தில் வெளிப்படுத்துவதன்மூலம்தான் உருவாகிறது. ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து பேசினால் அல்ல' என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

Sponsored


தற்போது இந்த விமர்சனங்களுக்குப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ``கடந்த 20 ஆண்டுகளில் இருந்த அணியைவிட தற்போதுள்ள அணி வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடுகிறது. தற்போதுள்ள அணி கடந்த 3 ஆண்டுகளில் பங்கேற்ற வெளிநாட்டு தொடர்களில் 9 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 3 தொடர்களைக் கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து இந்திய அணியின் வெளிநாட்டுப் பயணங்கள் சிறப்பாகவே அமைந்து வருகிறது. 4-வது டெஸ்டில் எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தோம். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் நம்மை விடச் சிறப்பாக செயல்பட்டார்கள். தோல்வியடைந்தது வருத்தம் அளிக்கிறது. எங்களைப் பாதித்துள்ளது. ஆனால், இந்தச் சூழ்நிலையில் இருந்து வெளியே வர வேண்டும். நம்பிக்கையுடன் இருந்தால் நீங்கள் நினைத்தது, விரும்பியது கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும். வெளிநாட்டு தொடர்களில் விளையாடும்போது அதிக மன வலிமை தேவைப்படும். அதை இப்போதுள்ள வீரர்கள் அதிகமாகவே பெற்றுள்ளார்கள். அடுத்த டெஸ்டில் சிறப்பாக விளையாடுவார்கள். அதிகமான ரன்கள் குவிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Sponsored




Trending Articles

Sponsored