`ரொம்பக் கஷ்டம்ங்க... டீக்கடைல வேலை பாக்குறேன்!’ - ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற ஹரீஷ் குமார்Sponsoredவலிகளை சுமந்துகொண்டு பல விளையாட்டு வீரர்கள் சாதித்து வருகின்றனர். இந்தியாவில் சாதித்த தடகள வீரர்களின் வெற்றிக்குப் பின்னால் ஒரு சோகமான பக்கம் உள்ளது. 12 விரல்களுடன் சாதித்த ஸ்வப்னா, கேன்சர் நோயுடன் தந்தை மரணப்படுக்கையில் போராடிக்கொண்டிருக்கையில் மனப்போராட்டத்துடன் தங்கம் வென்ற தேஜீந்தர் பால் சிங் தூர் இந்த வரிசையில் குடும்பச் சூழல் காரணமாக அப்பாவுக்கு டீக்கடையில் உதவி செய்து வருகிறார் ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற செபக் டெக்ரா அணி வீரர் ஹரீஷ் குமார்.

Photo Credit: ANI

Sponsored


செபக் டெக்ரா விளையாட்டு மூன்று பேர்களால் விளையாடக்கூடியது. இந்தப் போட்டியில் பந்தை ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்குக் கால், தலை மற்றும் நெஞ்சு மூலம் அடித்துத்தள்ள வேண்டும். சமீபத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி இந்தப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றது. செபக் டெக்ரா அணி வீரர் ஹரீஷ் குமார் தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க அப்பாவுக்கு டீக்கடையில் உதவி செய்து வருகிறார். 

Sponsored


இதுகுறித்து ஹரீஷ் குமார் பேசுகையில், ``2011-ம் ஆண்டு முதல் நான் இந்த விளையாட்டை விளையாடி வருகிறேன். என்னுடைய பயிற்சியாளர் ஹேம்ராஜ்தான் எனக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தினார். இந்திய விளையாட்டுக் கழகத்தில் என்னை அறிமுகம் செய்ததும் அவர் தான். அதன் பின்னர் தான் எனக்கு உதவித்தொகை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கிடைத்தது. நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். எங்களது குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம். குடும்பச் சூழல் காரணமாக நான் அப்பாவுக்கு டீக்கடையில் உதவி செய்து வருகிறேன். தினமும் தவறாமல் நான்கு மணி நேரம் பயிற்சி செய்கிறேன். எதிர்காலத்தில் நான் நல்ல வேலைக்குச் சென்று எனது குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.” என்றார்.

அவரது தாய் இந்திரா தேவி பேசுகையில், `` கடுமையான சூழலில் எனது பிள்ளைகளை வளர்த்து வருகிறேன். எங்களுக்குச் சிறியதாக ஒரு டீக்கடை உள்ளது. ஹரீஷ் எங்களது குடும்பச் சூழல் காரணமாக கடையில் உதவி செய்து வருகிறார். அவருக்கு உணவு மற்றும் போதிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த அரசுக்கு நன்றி. அவனது முன்னேற்றத்துக்குப் பெரும் உதவியாக இருந்த பயிற்சியாளர் ஹேம்ராஜுக்கு நன்றி. அவனுக்கு உறுதுணையாக இருந்து அவனது முன்னேற்றத்துக்காக பெரிதும் உதவியாக உள்ளார்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.Trending Articles

Sponsored