கர்ஜிக்கும் ஜோகோவிச்... தாக்குப்பிடிப்பாரா டெல் போட்ரோ... இறுதிக்கட்டத்தில் அமெரிக்க ஓப்பன்



Sponsored



அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றன. இந்தப் போட்டியில், முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் ஜப்பானின் நிஷிக்கோரியுடன் மோதினார். இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஜோகோவிச், 6-3, 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அமெரிக்க ஓப்பனில் 8-வது முறையாக அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 23-வது முறையாக இறுதிப்போட்டிக்குச் செல்கிறார்.

Sponsored


காயம் காரணமாக, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அவர், இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Sponsored


முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப்போட்டியில், காயம் காரணமாக ரஃபேல் நடால் பாதியில் வெளியேறினார். இதையடுத்து, டெல்போட்ரோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இறுதிப்போட்டியில் ஜோகோவிச் - டெல் போட்ரோ மோதுகின்றனர்.



Trending Articles

Sponsored