``கை நழுவிய கேப்டன் பொறுப்பு” - நிரூபிக்கும் கட்டாயத்தில் சுரேஷ் ரெய்னாரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தரப்பிரதேச அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டுள்ளார்.

Sponsored


இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் உத்தரப்பிரதேச அணிகளுக்காக விளையாடிவருகிறார். உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் அணியின் கேப்டன், ரெய்னா தான்.இவரது தலைமையில் அந்த அணி ரஞ்சிக்கோப்பை, விஜய் ஹசாரா கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடிவருகிறது. இந்நிலையில், சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.   இவருக்குப் பதிலாக, உத்தரப்பிரதேச வீர அக்‌ஷதீப் (Akshdeep) கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார். இதை உத்தரப்பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கான் தலிப் (Khan Talib) தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச ஒரு நாள் அணியின் கேப்டனாக தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது. விஜய் ஹசாரா கோப்பைக்கான போட்டியில், ரெய்னா கேப்டனாக தொடர்வார் எனத் தெரிகிறது.

Sponsored


கடந்த காலங்களில், ரெய்னாவின் மோசமான ஆட்டத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சிப்போட்டியில் 9 ஆட்டங்களில் ரெய்னா 105 ரன்களே எடுத்துள்ளார். ஆனால், அக்‌ஷதீப் 387 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் அந்த அணிக்காக அதிகபட்ச ரன்கள் குவித்ததும் அக்‌ஷதீப் தான். இவர், ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 

Sponsored


2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியில் பங்குபெறும் இந்திய அணியில் இடம்பிடிக்க ரெய்னா கடுமையாக உழைக்க வேண்டும். உள்ளூர் போட்டிகளில் தன்னை நீருபித்தால்தான், தேர்வாளர்கள் கவனத்தை ஈர்க்க முடியும். யோ- யோ டெஸ்டில் தேர்வாகி, தனது ஃபிட்னஸை ரெய்னா நிரூபித்துள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரெய்னாவின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. Trending Articles

Sponsored