சரிவிலிருந்து மீட்ட விஹாரி - ஜடேஜா ஜோடி! - முதல் இன்னிங்ஸில் 292 ரன்கள் எடுத்த இந்திய அணி!



Sponsored



இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 292 ரன்கள் சேர்த்தது. 

Photo Credit: BCCI

Sponsored


லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. அறிமுகவீரர் ஹனுமா விஹாரி 25 ரன்களுடனும், ஜடேஜா 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

Sponsored


முந்தைய நாள் ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை விஹாரியும், ஜடேஜாவும் தொடர்ந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களைக் கடக்க உதவியது. அறிமுகப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஹாரி, டெஸ்ட் போட்டிகளில் முதலாவது அரை சதத்தை பதிவு செய்தார். 104 பந்துகளில் அரை சதமடித்த அவர், 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 7 வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் இணைந்து அவர் 77 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய ஜடேஜாவும் தனது பங்குக்கு அரை சதத்தைப் பதிவு செய்தார். 95 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா 86 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை அந்த அணி விளையாடி வருகிறது. 



Trending Articles

Sponsored