நடுவரை 'திருடன்' என்று விமர்சித்த செரினா வில்லியம்ஸ் - தண்டனைகொடுத்த டென்னிஸ் ஆணையம்!அமெரிக்க ஓப்பன் டென்னிஸின் இறுதிப் போட்டியின்போது, போட்டி நடுவரை தரக்குறைவாகப் பேசியதற்காக செரினா வில்லியம்ஸுக்கு 17,000 அமெரிக்க டாலர் அபராதமாக விதித்து, அமெரிக்க டென்னிஸ் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Sponsored


அமெரிக்க ஓப்பன் டென்னிஸின் இறுதிப் போட்டியில், செரினா வில்லியம்ஸும், ஜப்பான் வீராங்கனை ஓசாகாவும் மோதினர். அந்தப் போட்டியின்போது, நடுவர் செர்ஜியோ ரமோஸ் செரினாவுக்கு எதிராகப் புள்ளிகள் வழங்கியபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவரிடம் முறையிட்ட செரினா, நடுவரை 'திருடன்' என்று திட்டினார். தாம், விளையாடும் எந்தப் போட்டியிலும் ரமோஸ் நடுவராக இருக்கக் கூடாது என்று கடுமையாகச் சாடினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடுவரை தரக்குறைவாகப் பேசியதற்காக, அமெரிக்க டென்னிஸ் ஆணையம் செரினா வில்லியம்ஸுக்கு 17,000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored