`சிக்ஸர் அடித்து சதமடித்த பண்ட்!’ - சரிவிலிருந்து மீட்ட ராகுல் #EngvIndSponsoredஇங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் வீரர் பண்ட் அதிரடியாகச் சதம் அடித்து இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். 

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர், களமிறங்கிய இந்திய அணி 292 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 40 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது இங்கிலாந்து அணி. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 464 ரன்கள் நிர்ணயம் செய்தது இங்கிலாந்து. 

Sponsored


ஆனால், இந்திய அணிக்கு மோசமான தொடக்கமே கிடைத்தது. முதல் இரண்டு ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. முக்கிய வீரர்களான புஜாரா, கோலி ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதன் பின்னர் ராகுல் மற்றும் ரஹானே இணை அணியைச் சரிவில் இருந்து மீட்கப் போராடியது. நிதானமாக விளையாடிய ரஹானே 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய விஹாரி, டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் 121 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து தடுமாறியது. இந்தியா எளிதாகத் தோற்றுவிடும் என்று நினைத்திருந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ராகுலுடன் இணைந்தார் பண்ட்.

Sponsored


இருவரும் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினர். அதிரடியாக விளையாடிய ராகுல் டெஸ்ட் போட்டிகளில் தனது 5-வது சதத்தை அடித்தார். மறுபுறம் பண்ட் அதிரடியாகத் தனது முதலாவது அரைசதத்தை அடித்தார். மோசமான பந்துகளை இருவரும் மாறி மாறி பவுண்டரிகளாக மாற்றினர். இந்தப் போட்டி ஒருநாள் போட்டிபோல் செல்ல, கேப்டன் ரூட் தொடர்ச்சியாகப் பந்து வீச்சாளர்களை மாற்றினார். ஒரு கட்டத்தில் அவரே களத்தில் இறங்கிப் பந்துவீசினார். ஆனாலும், இந்த இணையைப் பிரிக்க முடியவில்லை. சற்று முன்பு வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 142 ரன்களுடனும் பண்ட் 101 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். போட்டி முடிவடைய இன்னும் 33 ஓவர்கள் இருக்கும் நிலையில் இந்திய அணி வெற்றிபெற இன்னும் 166 ரன்கள் தேவை.  Trending Articles

Sponsored