`ரிஷப் பன்டை ஏன் எடுக்கவில்லை?' - பிசிசிஐ-க்குக் கேள்வி எழுப்பும் ஹர்பஜன் சிங்Sponsoredரிஷப் பன்டை ஆசியக் கோப்பை ஒருநாள் தொடருக்கு ஏன் எடுக்கவில்லை என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

photo credit:@ICC

Sponsored


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் இளம் வீரர் ரிஷப் பன்ட். இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் ஆரம்பித்த இந்திய அணிக்கு கே.எல் ராகுலுடன் சேர்ந்து சரிவிலிருந்து மீட்டெடுத்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் கணக்கை அதிகரித்தனர். இதில் சிக்ஸர் அடித்து தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார் ரிஷப் பன்ட். இதன்மூலம் இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற சாதனையும் அவர் படைத்தார். முன்னதாக இவரின் ஆட்டத்தைக் கண்ட இங்கிலாந்து நிலைகுலைந்து போனது. இவர்களது பாட்னர்ஷிப்பைப் பிரிக்க இங்கிலாந்து கேப்டன் ரூட் படாதபாடுபட்டார். 146 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப் அவுட் ஆனார். அதன்பிறகே இங்கிலாந்து அணி நிம்மதியடைந்தது. 

Sponsored


ரிஷப்பின் அதிரடி ஆட்டத்தைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். அதேவேளையில் வரும் 15ம் தேதி தொடங்கவுள்ள ஆசியக் கோப்பை ஒருநாள் தொடருக்கு ரிஷப்பை ஏன் எடுக்கவில்லை என முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``ரிஷப்பை ஏன் ஆசியக் கோப்பை ஒருநாள் தொடருக்கு எடுக்கவில்லை? அவருடைய ஆட்டம் ஒருநாள் போட்டி போன்ற ஃபார்மெட்டுக்கு வெகுவாகப் பொருந்தும். அப்படி இருந்தும் ஏன் எடுக்கவில்லை" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் கருத்தை ஆமோதித்து வலைதளவாசிகள் பலரும் ரிஷப்பை ஆசியக் கோப்பைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். Trending Articles

Sponsored