தாய்லாந்து ஓப்பன் பேட்மின்டன் : அரையிறுதியில் சாய்னா நேவால்...!Sponsoredதாய்லாந்து ஓப்பன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மின்டன் தொடர், பேங்காக்கில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், ஜப்பானின் ஹருகு சுசூகி மோதினர். விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில், முதல் செட்டை, சாய்னா கைப்பற்ற, இரண்டாவது செட்டை கைப்பற்றி டஃப் ஃபைட் கொடுத்தார் சுசூகி. இதனால், மூன்றாவது செட்டில் ஆட்டம் அனல் பறந்தது.


ஆனால், சற்றும் பதற்றமே படாத சாய்னா, மூன்றாவது செட்டை எளிதில் கைப்பற்றினார். இதனால், 21-15, 20-22, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சாய்னா, அரையிறுதிக்கு முன்னேறினார். 

Sponsored


Sponsoredமுன்னதாக, ஆடவர்  காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், தாய்லாந்து வீரருடன் மோதினார். இதில் ஆரம்பம் முதலே கெத்து காட்டிய சாய் பிரணீத் 21-16 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் சாய் பிரணீத், அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இதன் மூலம், தாய்லாந்து ஓப்பன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மின்டன் தொடரில், இரண்டு இந்தியர்கள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். Trending Articles

Sponsored