கரூரில் நாளை குறைதீர் கூட்டம்!"எரிவாயு நுகர்வோர்கள் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகளை நாளை நடக்க இருகும் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்" என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் அறிவித்துள்ளார்.


 

Sponsored


இதுசம்மந்தமாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள் மற்றும் நுகர்வோர்கள் பதிவு செய்யும் குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் காணப்படும் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு தொடர்பாக வரப்பெறும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்காக,எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கும் உட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்த ஏதுவாக, கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நாளை மாலை முன்று மணி போல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருக்கிறது. எனவே,கரூர் மாவட்ட எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் தங்களுக்கு அதில் இருக்கும் அனைத்து குறைகளையும் நாளை நடக்க இருக்கும் குறைதீர்க்கும் கூட்டத்தில், தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored