மலட்டாறு நீர்பிடிப்பு பகுதிகளில் மணல் எடுப்பு குறித்து நீதிமன்ற கமிஷன் ஆய்வுSponsoredகடலாடி தாலுகாவில்  சவடுமண் எடுக்க விதிக்கப்பட்ட  தடை தொடர்பாக  உயர்நீதிமன்ற மதுரை கிளை அட்வகேட் கமிஷன் ஆய்வு மேற்கொண்டனர்.


ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவில் சவடுமண் எடுப்பதாக அனுமதி பெற்று கொண்டு மலட்டாறு நீர் பிடிப்பு பகுதிகளில் ஆற்று மணல் எடுப்பதாக கரிசல்குளத்தை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் முருகன் தொடர்ந்த வழக்கில், அட்வகேட் கமிஷன் மூலம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.

Sponsoredஇதையடுத்து, உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிஷன் முருகப்பன் ராமநாதபுரம் மாவட்ட கடலாடி தாலுகாவில் உள்ள உசிலங்குளம், மறவர்கரிசல்குளம்  உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். இவருடன் கனிமவளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வருவாய்த்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.  இந்நிலையில், வழக்கு தொடர்ந்த மனுதாரர் முருகன் '' விசாரணை கமிஷன் அலுவலர்கள்  சவடுமண் குவாரியால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலாடி மலட்டாறு நீர்பிடிப்பு படுகையில் பார்வையிட மறுப்பதாகவும் குவாரிகள் செயல்படாத கிராம பகுதிகளை ஆய்வு செய்ததாகவும் '' புகார் கூறினார். மேலும் ''ஓய்வு பெற்ற நீதியரசர்கள் முன்னிலையில் மலட்டாறு நீர் பிடிப்பு பகுதிகளில் ஆய்வு நடத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்'' எனவும் தெரிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored