கரூர்: செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக ரெய்டு!Sponsoredகரூரில் உள்ள அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

                                
 


 

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான செந்தில்பாலாஜி கர்நாடக மாநிலம் குடகு ரிசார்ட்ஸில் தங்கி இருக்கிறார். அவர்மீது, அவர் முன்பு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமன ஆணை வழங்குவதாக சொல்லி நாலரை கோடி வரை மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கு, இப்போது அவருக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அந்த வழக்கில் செந்தில்பாலாஜி எந்நேரம் வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம், அதுவும் அவர்மீது குண்டாஸ் போடப்படலாம் என்ற பரபர பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பயத்தில் இருக்கும் செந்தில்பாலாஜி வயிற்றில் புளி கரைக்க வைக்கும் விதமாக நேற்றில் இருந்து கரூரில் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் சம்மந்தப்பட்ட இடங்கள், கம்பெனிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

Sponsored


நேற்று காலையில் இருந்து கோவை வருமான வரித்துறை கூடுதல் இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் கோவை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, மதுரையைச் சேர்ந்த ஐம்பது வருமான வரித்துறை அதிகாரிகள் எட்டு அணிகளாக பிரிந்து இந்த ரெய்டை நடத்தி வருகிறார்கள். நேற்று பதிமூன்று இடங்களில் ரெய்டை நடத்திய அதிகாரிகள், இன்று காலையில் இருந்து இரண்டாம் நாளாக ரெய்டை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான பிரியா ஹேண்ட்லூம் நிறுவனம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் இப்போது வரை ரெய்டை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.

Sponsored 

"செந்தில்பாலாஜி இந்த ரெய்டை முன்கூட்டியே ஸ்மெல் செய்து, தனது ஆதரவாளர்களை அலர்ட் செய்ததால்,வருமான வரித்துறையினரால் பெரிய அளவில் தஸ்தாவேஜூகளையோ, பணத்தையோ கைப்பற்ற முடியவில்லை. அதனால்தான், இரண்டாவது நாளாக ரெய்டை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமார் ஏகப்பட்ட தொழில் செய்கிறார். அவருக்கு சொந்தமாக ஜவுளி பிஸினஸூம் இருக்கிறது. ஆனால், அவரது வீட்டிலோ அல்லது கம்பெனிகளிலோ ரெய்டு நடத்தப்படவில்லை. செந்தில்பாலாஜி நேரடியாக சம்ம்மந்தப்பட்ட இடங்களிலும் ரெய்டு நடத்தப்படவில்லை.

இதன்மூலம், செந்தில்பாலாஜியையும், அவரைபோல டி.டி.வி.தினகரன் அணியில் இருக்கும் மற்ற எம்.எல்.ஏ-க்களையும் மிரட்டவே இந்த ரெய்டை நடத்துவதாக தெரிகிறது. ஆனால், இவ்வளவு அதிகாரிகள், இவ்வளவு இடங்கள் மற்றும் இரண்டு நாள் ரெய்டு என்று நடத்தியும் பெரிய அளவில் ஆவணங்களைத் திரட்ட முடியவில்லை. இந்தத் தகவல் வெளியில் சென்றால் தனிப்பட்ட ஒருவரை பழிவாங்க, இப்படி ஆளுங்கட்சி வருமான வரித்துறையைப் பயன்படுத்துவது அம்பலமாகிவிடும். அதனால், வருமான வரித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடும் என்ற பயத்தில்தான் தேவையான ஆவணங்களை அள்ள முடியுமா என்று இரண்டாவது நாளாக ரெய்டை ஜவ்வாக இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். மேலிடமும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, தாங்கள் சொல்லும் வரை ரெய்டை தொடருங்கள்' என்று இந்த நிமிஷம் வரை இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துள்ளதாக தெரிகிறது" என்கிறார்கள் இந்த ரெய்டின் பின்னணியை உற்று நோக்கும் புள்ளிகள் சிலர்.Trending Articles

Sponsored