குடிநீரில் கலந்து வரும் களிமண்..நெளிந்து வரும் புழு!. கரூர் அவலம்!.Sponsoredகரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், குடிநீரில் களிமண் கலந்தும், புழுக்கள் நெளிந்தும் வருவதால் குடிக்க முடியாமல் அவதியுறுவதாக பொதுமக்கள் கலங்குகின்றனர்.


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது கள்ளப்பள்ளி. இந்த கிராமத்தில் வரும் குடிநீரில்தான் களிமண் கலந்தும், புழுக்கள் நெளிந்தும் வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே வரலாறு காணாத வறட்சியால், மாவட்டம் முழுக்க எல்லாப் பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல கிராமங்களில் மக்கள் தடையில்லாத குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்துவருகிறார்கள். காவிரிக்கரை ஓரமாக இருந்தாலும், ஐம்பது அடிகள் வரை ஆற்றில் மணல் அள்ளியதால், குடிநீர் ஆதாரம் கெட்டு கடந்த சில மாதங்களாக கள்ளப்பள்ளியிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறதாம். இதனால், இந்த மக்கள் பத்து கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு லிட்டர் பெட்ரோல் செலவு செய்து வாகனங்களில் போய் குடிநீர் பிடித்து வருகிறார்கள். இல்லையென்றால், கேன் வாட்டர்களை வாங்கிக் குடித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் யாரேனும் இறக்க நேரிட்டால், அவர்களை சுடுகாட்டில் எரிக்க பாடியின் மீது உலை பூசுவதற்கு மண் குலைப்பதற்காக கேன் வாட்டரையே வாங்கி பயன்படுத்தும் கொடுமையும் நடக்கிறது.

Sponsored


இந்தச் சூழலில், இரண்டு வாரங்களாக கரூரில் நல்ல மழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. அதன் பலனாக, வராத ஊர் பொது பைப்புகளில் குடிநீர் வர ஆரம்பிக்க, அதில்தான் கலிமண் கலந்தும், புழுக்கள் நெளிந்தும் வர, மகிழ்ச்சியடைய வேண்டிய மக்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

Sponsored


இதுசம்மந்தமாக நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த நாகராஜன்,
 

"எங்க கிராமத்தில் இரண்டாயிரம் மக்கள் வாழ்கிறார்கள். கடந்த சில மாதங்களாகவே கடுமையான குடிநீர் பஞ்சம். பச்சைக்குழந்தைகளுக்கு தாகம் எடுத்தா தண்ணீர் தர முடிவதில்லை. பாலையே தரும் அளவுக்கு இங்கே குடிநீர் பஞ்சம். இப்போ மழை பெய்ததால், ஊர் பொதுப் பைப்புகளில் குடிநீர் வந்துச்சு. 'அப்பாடா தண்ணீர் பிரச்னை தீர்ந்துச்சு'ன்னு மகிழ்ச்சியடைஞ்சோம். ஆனால், குடிநீரில் களிமண் கலந்து கக்கலும் கழிசலுமா வருது. அதோடு, என்ன ரகம்ன்னே தெரியாத புழுக்களும் நெளிஞ்சு வருது. இதனால் மறுபடியும் எங்க ஊருக்கு குடிநீர் பஞ்சம் வந்துட்டு. எதனால், இப்படி மோசமான குடிநீர் வருதுன்னு தெரியலை. உடனே இந்த குடிநீரை சுத்தப்படுத்தி பொதுபைப்புகள்ல நல்ல தண்ணீரை வர வைக்கலன்னா மக்களைத் திரட்டி கரூர் டு திருச்சி சாலையில் நாள் கணக்கில் சாலைமறியல் பண்ணுவோம்" என்றார் அதிரடியாக!Trending Articles

Sponsored