அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ கடல் அட்டை பறிமுதல்



Sponsored



ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ கடல் அட்டைகளைக் கடலோரக் காவல் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடல் வாழ் உயிரினமான கடல் அட்டையை மீனவர்கள் பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால்,  கடல் அட்டைகளுக்கு  வெளிநாடுகளில் உள்ள மதிப்பினால் அதிக அளவு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மண்டபம் வடக்குக் கடற்கரைப் பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மண்டபம் கடலோரக் காவல் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு தலைமையில் அப்பகுதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

Sponsored


இந்தச் சோதனையின்போது முஸ்தபா என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கிலோ கடல் அட்டை பிடிபட்டது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் இது தொடர்பாக தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகளை மண்டபம் வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

Sponsored




Trending Articles

Sponsored