2.0 படத்தின் 3D மேக்கிங் வீடியோ..!இந்தியத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படம் '2.0'. காரணம், பெரும் பொருள் செலவில் இந்தியாவில் 3டி ஒளிப்பதிவில் தயாராகும் முதல் திரைப்படம் இதுதான். தமிழில் தொடங்கப்பட்ட இப்படத்தை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக மொழிகளிலும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனமான லைகா முடிவு செய்துள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, அக்ஷய் குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். 

Sponsored


இதுவரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்ட 2.0 புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலானது. அதுமட்டுமின்றி, படம் உருவான விதம் பற்றிய வெளியிடப்பட்ட முதற்கட்ட வீடியோவும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் உண்மையான ஹாலிவுட் தரம் என்று குறிப்பிட்டு '2.0' வீடியோவைப் பகிர்ந்துவருகிறார்கள். பிரமாண்டமான அரங்குகள், கார்கள் வெடிக்கும் காட்சிகள், விளையாட்டு மைதானத்தில் சண்டைக்காட்சிகள், ரோபோக்கள் உருவான விதம், ரஜினி - அக்‌ஷய் குமார் இருவருடைய மேக்கப்கான மெனக்கிடல் ஆகியவை அந்த வீடியோவில் அடங்கியுள்ளன.

Sponsored


இதைத் தொடர்ந்து 3டி படப்பிடிப்பு உருவான விதம் பற்றிய வீடியோ தற்போது வெளியிடப்பட்டு சோஷியல் மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Sponsored


இந்த வீடியோவில் இதுகுறித்து ரஜினி பேசுகையில், "இந்தியத் திரையுலகம் கண்டிராத மாபெரும் க்ராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட் படங்களுக்கு குறைவில்லாத தரத்தை இதில் காணலாம். ரசிகர்களின் ரியாக்ஷனுக்காகக் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

"இப்படம் எதிர்காலங்களில் 3டியில் படம் எடுப்பதற்கான ஊக்கத்தைத் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தும். நிறைய தியேட்டர்கள் 3டிக்கு மாற்றப்படும் என நம்புகிறேன்" என்று இந்த வீடியோவில் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். Trending Articles

Sponsored