ஓய்வுபெற்றும் உதவித்தொகை கிடைக்காதவருக்காக தர்ணாவில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்!கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு, எந்த உதவித்தொகையும் பெறாதவருக்கு ஆதரவாக, மாதர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Sponsored


 மன்னார்குடி தாலுக்கா வடுவூரைச் சேர்ந்தவர் இளங்கோவன். வடுவூர் கூட்டுறவு சொசைட்டியில் ஊழியராகப் பணிபுரிந்து, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2012 -ல் பணி ஓய்வுபெற்றார். பணிஓய்வு பெற்றவருக்கு, எந்தத் தொகையும் கூட்டுறவு வங்கியிலிருந்து வழங்கப்படவில்லை. அதைக் கேட்டு, கடந்த ஐந்து வருடங்களாகப் போராடி வந்துள்ளார் இளங்கோவன். இதுவரை இளங்கோவனுக்கு எந்தத் தொகையும் வழங்காததால், இன்று வடுவூர் கூட்டுறவு வங்கிக்குச் சென்ற அனைத்து இந்திய மாதர் சங்கத்தினர் இளங்கோவனுக்கு வழங்கவேண்டிய பணிஓய்வுத் தொகையைக் கேட்டுள்ளனர். அப்போது, வங்கிச் செயலாளர், எங்ளுக்கும் அதுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவருக்கான சேமிப்புத் தொகையும் இங்கு இல்லை என்று கைவிரித்துள்ளனர். 

Sponsored


இதனால், மாதர் சங்கத்தினர் கூட்டுறவு வங்கியின் வாசலிலேயே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டுறவு சங்க ஊழியர்கள், 5 லட்சத்துக்கு மேல் வரவேண்டிய தொகைக்குப் பதிலாக 25 ஆயிரம் கொடுத்துள்ளனர். பின்னர், காவல்துறையினர் அங்கு வந்து சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்பே, தர்ணாபோராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

Sponsored


இதுபோல, வடுவூர் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற  ஒன்பது பேருக்கு, ஒய்வுக்கான எந்தத் தொகையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 Trending Articles

Sponsored