கேந்திர வித்யாலாய பள்ளிக்கு 35 லட்ச ரூபாய் ஒதுக்கீடு..!Sponsoredகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் இயங்கிவரும் கேந்திர வித்யாலயா மத்திய அரசுப் பள்ளியை தரம் உயர்த்த மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். கடந்த ஆண்டு 1-ம் வகுப்புக்குப் புதிதாக இரண்டு பிரிவுகளும், அதற்கு முந்தைய ஆண்டு 11-ம் வகுப்புக்கு புதியதாக ஒரு பிரிவுக்கும் அனுமதி பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில், அப்பள்ளியில் முதல்வர் பதவி காலியாக இருப்பதை அறிந்து உடனடியாக அப்பணியை பூர்த்தி செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை வலியுறுத்தியதன் காரணமாக அப்பணி நிரப்பப்பட்டது. 

மேலும், இப்பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை என்பதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது பாராளுமன்ற உள்ளூர் மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதற்கான பணிகள்  நடைபெற்று வருகின்றன. மேலும், நிறுவனங்களுக்கான சேவை நிதி, தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத்திலிருந்து 15 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து அப்பணிகள் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

Sponsored


இந்நிலையில், நாகர்கோவில் கோணம் கேந்திர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. அங்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. தற்போது மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மூலம் 16 நிரந்தர ஆசிரியர்கள் நாகர்கோவில் கேந்திர வித்யாலயாவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

Sponsored
Trending Articles

Sponsored