’போர்க்கால அடிப்படையில் டெங்கு ஒழிப்புப் பணி’: கரூர் ஆட்சியர் உத்தரவுSponsoredடெங்குக் காய்ச்சல் பீதி நாளுக்கு நாள் தமிழகத்தை அச்சப்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கரூர் நகராட்சியில் ஒரு கொசு ஒழிப்பு பணியாளர் ஒரு நாளைக்கு 50 வீடுகளை ஆய்வு செய்யும் வகையில் 200 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் விடுதியுடன் கூடிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகளுக்கான டெங்கு தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

Sponsored


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் பேசும்போது, ’தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் தீவிர டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கரூர் நகராட்சியில் 200 பணியாளர்களும், பேரூராட்சிப் பகுதிகளில் 120 பணியாளர்களும், ஊராட்சிப் பகுதிகளில் ஒரு ஊராட்சிக்கு ஒரு பணியாளர் என்ற அடிப்படையில் கொசு புழு ஒழிக்கும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களைக் கண்காணிப்பதற்காக 5 வார்டுகளுக்கு ஒரு மண்டல அலுவலர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இப்பணி மாவட்டம் முழுக்க விரைவாக நடைபெற்று வருகிறது.

Sponsored


மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள விடுதியுடன் கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாகவும், தண்ணீர் தேங்காவண்ணமும் பார்த்துக் கொள்ள வேண்டும். உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதியுள்ள மருத்துவமனை நிர்வாகங்கள், தங்களது மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் கொசுமருந்து அடிக்கும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டதுடன், அனைவருக்கும் நிலவேம்புக் கஷாயம் வழங்குவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலவேம்புக் கஷாயம் தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப்பொருள்கள், பிளீச்சிங் பவுடர் போன்றவைகள் தேவையான அளவில் இருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீர் குளோரினேஷன் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

இருந்தபோதிலும், பொதுமக்கள் காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பருக வேண்டும். குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கத் தொட்டிகள் 15 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்பட்டது. தற்போது 7 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களில் தண்ணீர், மழைநீர் போன்றவைகள் தேங்காவண்ணம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து தங்களை பாதுகாத்துக் கொள்வதுடன், மாவட்ட நிர்வாகத்துக்கும் ஒத்துழைக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.Trending Articles

Sponsored