குப்பை அள்ளவா என்னை தனி அலுவலராக நியமித்துள்ளார்கள்? பொதுமக்களிடம் கடுகடுக்கும் அதிகாரி!Sponsoredபொது இடங்களில் தேங்கியிருக்கும் குப்பைகள்குறித்த கேள்விக்கு, ஊராட்சி தனி அலுவலர் பொறுப்பில்லாமல் பேசியுள்ளார். அந்தச் சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

'எங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கி, குப்பைகள் குவிந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அதனால், குப்பைகளை அள்ளவும் தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அவர்களிடம், "குப்பை அள்ளவா என்னை தனி அலுவலராக நியமித்துள்ளார்கள்?" என்று கேட்டு கோபத்தைக் கிளறி இருக்கிறார். 

Sponsored


Sponsoredகிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், பூஜா என்ற சிறுமி, சன்னாசி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் இறக்க, தனி அலுவலரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு பொதுமக்களை ஆவேசம்கொள்ளவைத்திருக்கிறது. இது சம்பந்தமாக, நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன், 'கரூர் மாவட்டத்தில் டெங்குவை முற்றிலும் ஒழிக்கும்பொருட்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறார் மாவட்ட ஆட்சியர். ஆனால், கிருஷ்ணராயபுரத்தில் தனி அலுவலராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி, அதற்கு எதிர்மறையாகச் செயல்பட்டுவருகிறார். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிந்தலவாடி, லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி ஊராட்சிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கிநிற்கிறது. வாய்க்கால்களில் குப்பைகள் அடைச்சுக்கிட்டிருக்கு. அங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி, அதை அப்புறப்படுத்தாமல் துர்நாற்றம் வீசுது. மூன்று பஞ்சாயத்துகளுக்கும் பயன்படுத்த வேண்டிய 15-க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளார்கள். அவற்றில் பல சேதமாகிவிட்டன.

 அதனால்,  அந்தப் பகுதியில் டெங்கு காய்ச்சல் கடுமையாகப் பரவ ஆரம்பிச்சிடுச்சு. அதனால், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் போய், 'ஆங்காங்கே கொட்டிக்கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுங்க; தேங்கி நிற்கும் மழைநீர் வடிய ஏதுவாக வாய்க்கால்களை தூர்வாருங்கள், சும்மா நிற்கும் 15-க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகளை மூன்று ஊராட்சிகளிலும் ஆங்காங்கே மக்கள் பயன்பாட்டுக்கு வையுங்கள்'ன்னு கோரிக்கை வைத்தோம். ஆனால், தனி அலுவலர் கிருஷ்ணமூர்த்தியோ, 'குப்பை அள்ளவா என்னை தனி அலுவலரா நியமிச்சிருக்காங்க?'ன்னு எடக்குமடக்கா பேசுகிறார். அவர் எங்களிடம் மன்னிப்பு கேட்கணும். குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கணும். இல்லைனா கரூர் டு திருச்சி சாலையில் மறியல் பண்ணுவோம்' என்றார் அதிரடியாக!Trending Articles

Sponsored