"நடுரோட்டில் உள்ள மின்கம்பங்களை ஓரமா நடுங்க!" கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!



 

"மின்கம்பங்கள்னா சாலையின் ஓரத்தில் இருக்கும். வயல்வெளிகள்ல இருக்கும். ஆனா, எங்க ஊர்ல நடுரோட்டுல ரெண்டு மின்கம்பங்கள் இருக்கு. இதனால், இரவு நேரத்துல பலர் அதுல மோதி அடிப்பட்டு, அல்லல்படுறாங்க உசுருக்கு உலைவைக்கக் காத்திருக்கும் அந்த ரெண்டு மின்கம்பங்களையும் பிடிங்கி ஓரமா நடச் சொல்லுங்க சார். உங்களுக்குப் புண்ணியமா போகும்!" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள், இனூங்கூர் கிராம மக்கள்.

Sponsored


கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது, இனூங்கூர் கிராமம். இந்தக் கிராம மக்கள்தான் திரளாக வந்து கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜிடம் புகார் மனுவைக் கொடுத்துவிட்டு நம்பிக்கையோடு நகர்ந்தார்கள். அவர்களில் ஒருவராக வந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த தனபால் என்பவரிடம் பேசினோம். சாலையின் நடுவில் இருக்கும் மின்கம்பத்தின் போட்டோவை நம்மிடம் காட்டிய அவர்...

Sponsored


"எங்க கிராமத்துல 50 குடும்பங்கள் உள்ளன. மின்சார வாரியத்தைச் சேர்ந்தவர்கள் சாலையின் நடுவே இரண்டு மின்கம்பங்களை நட்டிருக்கிறார்கள். அவற்றில் லைட்டும் கிடையாது.  இரவில் வாகனங்களில் போகுகிறவர்கள், அதில் மோதி கீழே விழுந்து அடிபடுகிறார்கள். ஒரு சிலருக்கு சீரியஸா ஆகியிருக்கு. சைக்கிள்ல போற வயசானவர்களும் இந்த மின்கம்பங்கள்ல மோதிடுறாங்க.  இரவு நேரத்துல சாலையில் விளையாடுற சிறுவர்களும்கூட இந்த இரண்டு மின்கம்பங்களிலும் மோதிகிட்டு அடிக்கடி மண்டை உடைஞ்சு கட்டு போட்டுக்கிட்டு திரியிறாங்க. இப்படி தினமும் இரவுல விபத்து ஏற்படுது. 'இந்த ரெண்டு மின்கம்பங்களையும் பிடுங்கி, சாலை ஓரத்துல நடுங்க'ன்னு மின்சார வாரிய அதிகாரிகளை 20-க்கும் மேற்பட்ட தடவை நேரில் பார்த்து மனு கொடுத்தும் புண்ணியமில்லை. 'அதை உடனடியா பிடுங்க முடியாது. அதுக்கு, மேலதிகாரிகிட்ட அனுமதி வாங்கணும். அனுமதி கேட்டு கடிதம் எழுதுறோம். அனுமதி வந்தா பார்க்கலாம்'னே ஒவ்வொரு தடவையும் சொல்லி தட்டிக்கழிக்கிறாங்க.

Sponsored


 இது மட்டுமில்லாம, இன்னொரு மின்கம்பம் அடிப்பக்கம் உடைஞ்சு சாஞ்சு நிக்குது. எந்நேரம் வேண்டுமானாலும் கீழே போற ஆள்கள் மேல விழுந்து உயிரை காவு வாங்கலாம். அதையும் சரி பண்ணலை. அப்புறம், எங்க ஊர்ல உள்ள எல்லா மின்கம்பங்களிலும் கடந்த ஆறு மாதமா லைட் எரியலை. லைட் எரிஞ்சாகூட நாங்க எச்சரிக்கையாகி தப்பிப்போம். இருட்டா இருக்கிறதாலதான், மின்கம்பங்கள்ல வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுது. அதனால்தான், கலெக்டராவது நடவடிக்கை எடுப்பார்ங்கிற நம்பிக்கையில மனு கொடுத்திருக்கிறோம். அப்படியும் நடவடிக்கை இல்லைனா கடுமையான போராட்டம் நடத்துவோம்!" என்றார் விரக்தியாக.



Trending Articles

Sponsored