மனைப்பிரிவுகளை மூன்று வகையாகப் பிரித்து வரைமுறைப்படுத்தும் முறை நீக்கம்! கலெக்டர் அறிவிப்புSponsored 

கரூர் மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்துதல் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரைமுறைப்படுத்தும் திட்டம்குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில், "ஏழை எளிய மற்றும் நடுத்தர வகுப்பினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக்கொண்டு வருங்காலத்தில் சொந்தமாக வீடு கட்டி அதில் நிம்மதியாக  வாழ்வோம் என்ற கனவுடன் விலை குறைவாக உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வாங்கிவிடுகின்றனர். இம்மனைப்பிரிவுகளில் விதிமுறைகளின்படி சாலை வசதி, தெருவிளக்குகள், கழிவுநீர் வடிகால்கள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது.

Sponsored


இவர்களின் கோரிக்கைகளையும், கருத்துகளையும் அரசு கவனமாக பரிசீலித்து அரசாணை எண்கள் 78 மற்றும் 172-ன் கீழ் வெளியிட்டுள்ளது. அதன்படி விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப்பிரிவுகளை மூன்று வகையாகப் பிரித்து வரைமுறைபடுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரைமுறை செய்யப்படும். ஒரு மனைப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு மனை விற்கப்பட்டிருந்தால் அந்த மனைப்பிரிவு வரைமுறைப்படுத்தப்படும். மேலும், மனைப்பிரிவில் அமைந்துள்ள சாலைகள் உள்ளது உள்ளபடி நிலையில் வரைமுறைப்படுத்தப்படும். மனைப் பிரிவு மேம்பாட்டாளர்கள் தங்கள் மனைப்பிரிவில் வரைமுறைப்படுத்தக்கோரும் விற்கப்படாத மனைகளின் பரப்பளவில் 10 சதவிகிதம் நிலத்தை உள்ளாட்சிக்கு தானமாக வழங்க வேண்டும்.

Sponsored


அந்த நிலம் எத்தகைய வகையில் இருப்பினும் விதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தனிநபர்களால்
வாங்கப்பட்ட மனையை வரைமுறைப்படுத்தும்போது இவ்விதியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். ஏழை எளிய மக்களின் நலனை குறிக்கோளாகக்கொண்டு தமிழ்நாடு அரசு பொதுமக்கள் பெரிதும் பயன்படும் வகையில் மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்தை மேலும் எளிமைப்படுத்தியும், கட்டணங்களைக் குறைத்தும் ஆணையிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விரிவான விளக்கம் தேவைப்படுவோர் திருச்சி, காஜாமலையில் உள்ள நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம்" என்று தெரிவித்தார்.Trending Articles

Sponsored