'அவரு எம்பிபிஎஸ் எம்பிஎம்பி படிச்ச டாக்டராமாம்!' - விஜயபாஸ்கரை வம்பிழுத்த லியோனிதிமுக மருத்துவ அணி சார்பில் புதுக்கோட்டை நகரில் உள்ள திலகர் திடலில் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் ஐ. லியோனி, விஜயபாஸ்கரை விளாசித் தள்ளினார். "இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருத்தர் தமிழ்நாட்டுக்கு அமைச்சரா இருக்காரு. அவரு யாருன்னுதான்  ஒங்களுக்குத் தெரியுமே.(கூட்டத்தினர் விஜயபாஸ்கர் என்று ஆர்ப்பரிக்கின்றனர்) அவரு எம்பிபிஎஸ் எம்பிஎம்பி படிச்ச டாக்டராமாம். அவருக்கு டாக்டர் தொழிலையும் பார்க்கத் தெரியலே.

Sponsored


அமைச்சர் சேவையையும் பண்ணத்தெரியலே.மனுசன் ரெண்டையும் போட்டுக் குழப்பி, ஜனங்களை சாகடிக்கறாரு. எப்படின்னு கேக்கறீங்களா? சேவையா பண்ண வேண்டிய அமைச்சர் பணியை தன்னோட முழு நேரத் தொழிலா மாத்திட்டாரு.தொழிலா பார்க்க வேண்டிய டாக்டர் பணியை சுத்தமா மறந்துட்டாரு.அவருக்கு அமைச்சராகவும் இருக்கத் தகுதி இல்லே.டாக்டராவும் இருக்கத் தகுதி இல்லே.ஏதோ தமிழ்நாட்டுக்கு பிடிச்ச கெரகம், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ,ஆர்.பி.உதய குமார், அப்பறம் எங்க ஊர் பேரைக் கெடுக்க வந்த திண்டுக்கல் சீனிவாசன் இவிங்கல்லாம் அமைச்சர்களா இருக்காங்க."என்றவர், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்.ஸையும் விடவில்லை.அவர்கள் குரலில் மிமிக்ரி செய்து கலாய்த்தார்.

Sponsoredலியோனியின் பேச்சுக் குறித்துக் கேள்விப்பட்ட விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், பதிலடி கொடுக்கும் வகையில், அதே திலகர் திடலில் கூட்டம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கேள்விப்பட்ட திமுகவினர், "நம்ம கட்சில பேச லியோனி இருக்காரு.அவங்க யாரைப்பா கூட்டி வந்து கூட்டம் போடுவாங்க.ஒருவேளை,'ககபோ மினிஸ்டர்' செல்லூர் ராஜூ வைக்கூட்டி வருவாங்களோ?" என்று கிண்டலாகக் கேட்கிறார்கள்.

Sponsored
Trending Articles

Sponsored