அடிமாடுகளாகச் செல்லும் 15 நாள்களே ஆன கன்றுகள்..! - வேதனையில் விவசாயிகள்Sponsored 

"ஒரு காலத்தில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலா இருந்துச்சு. தமிழகம் முழுக்க விவசாயிகள் மாடுகளை விற்பதற்கே தயங்குவாங்க. வயசாகி, நடக்கவே முடியாத மாடுகளைதான் மனக்கலக்கத்தோட விற்பனை செய்வாங்க. ஆனால், காவிரியில் தண்ணீர் வராமல் தொடர்ந்து வருடா வருடம் விவசாயம் நசிய, கால்நடைகளை வித்துப்புட்டு, காலம் தள்ள வேண்டிய நிமைமை அவர்களுக்கு. அதனால், வாலிபமான மாடுகளையும் விற்பனை செய்ய ஆரம்பிச்சாங்க. இப்போ, அது  வளர்ந்து பிறந்து பதினைந்து நாள் ஆன கன்றுகளைகூட  விற்பனை செய்வது அதிர்ச்சி அளிக்கிறது" என்று வருத்தப்படுகிறார்கள் அந்த பகுதி மக்கள் சிலர்.

Sponsoredகரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது உப்பிடமங்கலம். இந்தப் பேரூராட்சியில் உள்ள மாட்டுச்சந்தை தமிழக அளவில் பெரிய மாட்டுச் சந்தைகளில் ஒன்று. ஒவ்வொரு மாட்டுச் சந்தை அன்றும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை ஆகும். அந்தச் சந்தையில்தான் இப்போது பதினைந்தே நாள்கள் ஆன கன்றுக்குட்டிகள் விற்கப்பட்டு, கேரளாவுக்கு அடிமாடோடு அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. 

Sponsored


 இதுபற்றி, நம்மிடம் போட்டோ ஆதாரத்துடன் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், 'மாடுன்னாலே செல்வம்ன்னு பெயர். மாடுகள் புழங்கும் இல்லங்களில் லட்சுமி கடாட்சம் விளையாடும்ங்கிறது இன்றும் நம்பிக்கை. கோமாதான்னு அதை தெய்வமா கும்பிடுகிறோம். முன்பு மாடுகளை வளர்ப்பவர்கள் மாடுகளை வீட்டில் ஒரு மனிதராக பாவித்து செல்லமாக வளர்ப்பார்கள். மாடுகளை விற்க நேர்ந்தால், அழுது அரற்றுபவர்களும் உண்டு. ஆனால், இப்போது மாடுகள் வளர்ப்பவர்கள் மாற்றுத்தொழில் இல்லாமலும், மாடுகளை மேய்க்க மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் அல்லாடி போயிருக்கிறார்கள்.

அதனால்தான், முன்பெல்லாம் வயதான மாடுகளை மட்டுமே மாட்டுச் சந்தைகளில் கொண்டு வந்து விற்பனை செய்த அவர்கள், இப்போது இளங்கன்றுகளைகூட அடிமாடாக விற்பனை செய்யும் கொடுமை நடக்க ஆரம்பிச்சுருக்கு. உப்பிடமங்கலம் மாட்டுச் சந்தைக்கு ஏதேச்சையாக போனப்ப,அடுமாடுகளோட விற்பனை செய்கின்றனர். பிறந்து பதினைந்து நாட்களே ஆன கன்றுக்குட்டிகளையும் விற்பனை செய்ய கட்டி போட்டிருந்தார்கள். அதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாயிட்டது. விவசாயம் வீழ்ந்ததின் மற்றொரு சமிக்ஞைதான் இந்த கொடுமை. பதினைந்தே ஆன கன்றுகளை அடிமாடுகளாக அனுப்பும் கொடுமைக்கு அரசுதான் முற்றுப்புள்ளி வைக்கனும்" என்றார்.Trending Articles

Sponsored