மதுபான கடைக்கு எதிர்ப்பு - வாக்காளர் அட்டையைத் திரும்ப ஒப்படைத்துப் போராடிய கிராம மக்கள்!Sponsoredபெண்கள் குளிப்பதை படம் எடுக்கும் குடிகாரர்களின் தொல்லையைத் தடுக்க மதுக்கடையை மூட வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சின்னத் தொண்டி கிராம மக்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் கோயில், பள்ளிக்கூடம், மனநலக் காப்பகம் மற்றும் பெண்கள் குளிக்கும் ஊரணி ஆகியவற்றிற்கு இடையே அரசு மதுபானக் கடை அமைக்க  அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு மதுபானக் கடை இயங்கி வருகிறது.

Sponsored


இதுகுறித்து அந்த கிராம மக்களிடம் பேசினோம்.  ’மதுபானக் கடைக்கு வரும் குடிகாரர்கள், குடித்துவிட்டு பாட்டில்களை கோயில், பள்ளி மற்றும் மனநல காப்பகப் பகுதிகளில் உடைத்து எறிகின்றனர். அப்பகுதியில் உள்ள ஊரணியில் குளிக்க வரும் பெண்களைக் குடிகாரர்கள் படம் எடுப்பதும், பெண்களையும், மாணவிகளையும் அச்சுறுத்தும் வகையிலும், ஆபாசமாகவும் பேசி கிண்டல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அங்குள்ள மதுக்கடையினை அகற்ற வேண்டும். கடை திறப்பதற்கு முன்பே கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை’ என்றனர். அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து சின்ன தொண்டி கிராம மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்திற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வாக்காளர் அடையாள அட்டைகளுடன்  திரண்ட கிராம மக்களை, அங்கிருந்த அதிகாரிகள் சமாதானப்படுத்தி, மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். 

Sponsored
Trending Articles

Sponsored