ஓரினச் சேர்க்கை தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்..! உச்ச நீதிமன்றம் அதிரடிSponsored'ஓரினச் சேர்க்கையைத் தடைசெய்யும் சட்டப் பிரிவு 377-ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஓரினச் சேர்கையாளர்கள் ஐந்து பேர், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், 'இயற்கையாக எங்களுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் உறவுமுறை விருப்பத்தால், நாங்கள் காவல்துறைக்கு பயந்தே வாழவேண்டிய நிலை உள்ளது. ஓரினச் சேர்கைக்கு அனுமதியளிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ஓரினச் சேர்க்கையைத் தடைசெய்யும் 377-வது பிரிவு தற்போது பொருந்துமா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். அந்த சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுகுறித்து, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored