ஸ்ரீதர் மனைவி உள்பட 5 பேர் கைது! காஞ்சிபுரம் போலீஸார் அதிரடிSponsoredகாஞ்சிபுரம் ரௌடி ஸ்ரீதர் தற்கொலைக்கு பிறகும், அவரது ஆதரவாளர்கள் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீதர் ஆதரவாளர்களிடையே ஸ்ரீஅவருக்குப் பின்னர் யார் கோலோச்சுவது என்ற போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஸ்ரீதர் பெயரை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காஞ்சிபுரம் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனால் ஸ்ரீதரின் மனைவி உட்பட அவரது ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே குமாரவாடி பகுதியில் சுமார் 32 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில்  ஸ்ரீதரின் மனைவி குமாரி, தம்பிகள் ஆகியோர் லட்சுமணனின் பலகோடிகள் மதிப்பிலான 32 ஏக்கர் நிலத்தை மிகக்குறைந்த விலையில், சுமார் 15 கோடி ரூபாய்க்குக் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் ரூ.11 கோடி மட்டுமே கொடுத்து நிலத்தை வாங்கினர். மேலும் மீதமுள்ள 4 கோடியை ஒரு வருடத்திற்கும் மேலாக லட்சுமணனுக்கு ஸ்ரீதரின் மனைவி குமாரி கொடுக்காமல் அலைக்கழித்து வந்தார். மீதத் தொகையை கேட்டபோது ஸ்ரீதரின் அதரவாளர்கள், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீதரின் மனைவி குமாரி, ஸ்ரீதரின் தம்பிகளான மகேந்திரன், கண்ணன் மற்றும் அருள், நிர்மலா ஆகிய 5 பேர் தன் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் லட்சுமணன் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

Sponsored


புகாரை அடுத்து ஸ்ரீதரின் மனைவி குமாரி, ஸ்ரீதரின் தம்பிகளான மகேந்திரன்,கண்ணன் மற்றும் அருள், நிர்மலா ஆகிய 5

பேரிடம் சாலவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 5 பேரும் கூட்டாக சேர்ந்து லட்சுமணனின் பல கோடி மதிப்பிலான நிலத்தை 15 கோடிக்கு விற்பதற்கு அவரை மிரட்டியதும்,11 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் மீதமுள்ள தொகையை கேட்ட லட்சுமணனுக்கு, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் சாலவாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Sponsored


இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறைந்த ஸ்ரீதரின் பெயரை அவர்களது உறவினர்கள் மற்றும் எவரேனும் கூறி நில அபகரிப்பு,கொலை மிரட்டல் உள்ளிட்ட வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட முயன்றாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும்  ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களைக் கண்காணிப்பதற்கென்றே  காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதற்கென  தனிப்படை ஒன்று உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.Trending Articles

Sponsored