திருமலை திருப்பதியில் ஒரு நாள் பிரமோற்சவ விழா!திருமலை திருப்பதியில் உறையும் ஸ்ரீவெங்கடேசப் பெருமானுக்குத் தினந்தோறும் திருவிழாதான். எப்போதும் சர்வ அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகளை ஏற்றுக்கொண்டிருப்பவர் திருப்பதி வேங்கடாசலபதி. என்றாலும், திருப்பதியின் பெருமைக்குப் பெருமை அங்கு பிரமோற்சவம், ஜென்மாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கங்கம்மா சத்ரா போன்ற பல திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் விஷேசமான திருவிழா ரதசப்தமி திருநாள்.

Sponsored


இந்த ஆண்டு வரும் 24-ம் தேதி ரத சப்தமி விழா நாள் வருகிறது. சூரிய பகவானை ஆராதிக்கும் இந்தத் திருநாளில் சூரிய பகவானின் அதிதேவனான நாராயணனும் கொண்டாடப்படுகிறார். அதனால்தான் திருமலை திருப்பதியில் இந்த நாளில் ஒரு நாள் பிரமோற்சவ விழா நடத்தப்படுகிறது. ஜனவரி 24 அன்று நடைபெறும் ஒருநாள் ரத சப்தமி பிரமோற்சவத்தில் ஸ்ரீவேங்கடாசலபதி விதவிதமான அலங்காரங்களில் வீதி உலா வருவார். புரட்டாசி மாத 9 நாள் பிரமோற்சவ விழாவில் கொடியேற்றத்தை அடுத்து வரும் நாள்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவதைப்போல ரத சப்தமி ஒரே நாளில் ஏழுவித வாகனங்களில் வீதி உலா வருவார். புரட்டாசி பிரமோற்சவத்தைக் காண முடியாதவர்கள் இந்த ஒரு நாள் ரத சப்தமி பிரமோற்சவத்தைக் கண்டு மகிழ்வார்கள்.

Sponsored


Sponsored


24-ம் தேதி காலை 5.30 மணிக்கு சூரியபிரபை வாகனம். 9 மணிக்கு சின்ன சேஷ வாகனம். 11 மணிக்கு கருட வாகனம். மதியம் 1 மணிக்கு ஹனுமான் வாகனம். 2 மணிக்கு சக்ரஸ்நானம் தீர்த்தவாரி. மாலை 4 மணிக்கு கற்பக விருட்ச வாகனம். மாலை 6 மணிக்கு ஸர்வபூபாள வாகனம். இரவு 8 மணிக்கு சந்திரபிரபை வாகனம் என அன்று முழுவதுமே திருமலை வேங்கடேசப் பெருமான் ஆனந்த நிலையில் அற்புதக் கோலத்தில் வீதி உலா வருவார். அவரைக்கண்டு தரிசிக்கும் பக்தர்களும் அகமகிழ்ந்து 'கோவிந்தா' கோஷங்களை எழுப்பி திருமலையை அதிரச் செய்வார்கள். Trending Articles

Sponsored