புலிகள் கணக்கெடுப்பு தொடங்குவதால் ஒரு வாரத்துக்கு புலிகள் காப்பகம் மூடப்பட்டது!Sponsoredநெல்லை மாவட்டத்தில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இன்று கணக்கெடுப்புத் தொடங்குகிறது. அதனால் ஒரு வார காலத்துக்கு களக்காடு-முணந்துறை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு சிறுத்தை, புலி, யானை, கடமான், செந்நாய், சிங்கவால் குரங்கு, கருமந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. இங்குள்ள விலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன், தேசிய புலிகள் ஆணையம் சார்பாக 4 வருடங்களுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். 

Sponsored


கடந்த 2014-ம் வருடம் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு 28-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 2-ம் தேதி வரையிலும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் வனத்துறையினர் உள்ளிட்ட 500 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இன்று அனைவரும் 10 பேர் கொண்ட 50 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வனத்துக்குள் அனுப்பப்பட உள்ளனர்.

Sponsored


இதையொட்டி, களக்காடு-முண்டந்துறை காப்பகம் இன்று முதல் மூடப்படுகிறது. களக்காடு தலையணை, செங்கல்தேரி, காரையாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக களக்காடு-முண்டந்துறை காப்பக கள இயக்குநரான வெங்கடேஷ் தெரிவித்தார். அத்துடன், திருக்குறுங்குடி நம்பி கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பிப்ரவரி 3-ம் தேதிக்குப் பின்னர் வழக்கம்போல் பயணிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.  Trending Articles

Sponsored