அரசுப் பள்ளிக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களை வழங்கிய காங்கிரஸ் நிர்வாகி!Sponsoredகரூரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றுக்கு காங்கிரஸ் கட்சியின் கரூர் நகரத் தலைவர் ஸ்டீபன்பாபு சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை வழங்கினார்.

கரூர் வெங்கமேடு வி.வி.ஜி நகர் பகுதியில் இயங்கி வருகிறது அரசுப்பள்ளி. இந்தப் பள்ளிக்குதான் காங்கிரஸ் கட்சியின் கரூர் நகரத்தலைவர் ஸ்டீபன்பாபு, நகராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் வாசுதேவன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சுரேகா பாலச்சந்தர், தாந்தோனி குமார் உள்ளிட்டவர்களுடன் சென்று சுதந்திர போராட்ட வீரர்களின் பிரேமிடப்பட்ட புகைப்படங்களை வழங்கினார்.

Sponsored


இதுகுறித்து தெரிவித்த ஸ்டீபன்பாபு, 'சமீபத்தில்தான் நாட்டின் குடியரசின் தினத்தைக் கொண்டாடினோம். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். சுதந்திர, குடியரசு தினங்களை மாணவர்கள் வெறும் விடுமுறை நாட்கள் என்கிற அளவிலேயே கடந்துபோய்விடக்கூடாது. 

Sponsored


இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை நமக்கு பெற்றுத் தந்த வரலாற்று நாயகர்களை, சுதந்திரப் போராட்ட வீரர்களை, தியாகிகளை, சுதந்திர வேட்கையை கட்டமைத்த மாபெரும் தலைவர்களை பற்றி மாணவர்கள் தெரிந்தும், அறிந்தும்  வைத்திருக்கனும். அதற்கு, அவர்களின் புகைப்படங்கள் மாணவர்களின் கண்களில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி வரலாற்று புருஷர்களின் புகைப்படங்கள் இல்லாதப் பள்ளிகளை கண்டறிந்து, எங்களது சொந்த செலவில் படங்களை வழங்கிக்கிட்டு வருகிறோம். அந்த வகையில்தான், வி.வி.ஜி நகர் அரசுப் பள்ளிக்கு காந்தி, நேரு, காமராஜர், வல்லபாய் படேல், நேதாஜின்னு சுதந்திர போராட்டத் தலைவர்களின் பிரேமிடப்பட்ட போட்டோகளை வழங்கி இருக்கிறோம். வரலாறு முக்கியம்' என்று தெரிவித்தார்.
 Trending Articles

Sponsored