புலிகள் கணக்கெடுப்பு நிறைவு: களக்காடு - முண்டந்துறை வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி!Sponsoredகளக்காடு -முண்டந்துறை வனப்பகுதியில் நடைபெற்று வந்த புலிகள் கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிகளுக்குள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு இருக்கிறது. இது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நெல்லை மாவட்ட எல்லையில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. நாட்டிலேயே முதலாவது புலிகள் காப்பகம் என்ற சிறப்பைப் பெற்ற இந்த காப்பகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் புலிகள், யானை, மான்கள், மிளா, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்கள் அதிகமாக வாழ்கின்றன. இந்த வனப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் விலங்குகள் கணக்கெடுப்பை வனத்துறை எடுத்து வருகிறது. 

Sponsored


அதே சமயம், தேசிய அளவில் புலிகள் கணக்கெடுப்பு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றன. தன்னார்வலர்கள், வனத்துறையினர் 500 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். பத்து பேர்கள் கொண்ட 50 குழுக்கள் அமைக்கப்பட்டு வனப்பகுதியில், விலங்குகளின் காலடித் தடம், எச்சங்கள், நக்கீறல்கள் மூலமாகவும் நேரில் பார்ப்பதன் வாயிலாகவும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

Sponsored


ஒரு வாரகாலமாக நடைபெற்ற இந்தப் பணிகள் 3-ம் தேதி மாலையுடன் முடிவடைந்தது. இதில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் தொகுக்கப்பட்டு தேசிய ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அதற்கான பணிகளில் வனத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 27 புலிகளின் கால் தடங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. 

அத்துடன், 7 சிறுத்தைகளின் கால் தடங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இங்கு சேகரிக்கப்பட்ட விலங்குகளின் தடயங்கள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வன விலங்குகள் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அதன் பின்னரே புலிகளின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும். இதனிடையே, ஒருவாரமாக வன விலங்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டதால், வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கபப்ட்டு இருந்தது. தற்போது கணக்கெடுப்பு முடிவடைந்ததால் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.  Trending Articles

Sponsored