வழக்குத் தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!Sponsoredகுமரி மாவட்டம் கட்டையன்விளையைச் சேர்ந்த தேவராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதற்காக அவர் தாக்கல்செய்த மனுவில், 'நாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமான நாகர்கோவில் நகராட்சி கமிஷனரை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கு,  நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நாகர்கோவிலில் புதிய நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்ற பின்பு வருமானம் அதிகரித்துள்ளது. எனவே, மனுதாரர் இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தாக்கல்செய்துள்ளார் என்று வாதாடினார். விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கோரிக்கையை பொதுநல மனுவாக தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நாகர்கோவில் நகராட்சி கமிஷனர் சிறப்பாகப் பணி புரிந்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனுதாரர் உள்நோக்கத்துடன் மனுதாக்கல் செய்திருப்பதால், அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை மதுரை உயர் நீதிமன்ற சட்ட உதவி மையத்துக்கு வருகிற 19-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்' என்று  கூறியுள்ளனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored