"முகேஷ் அம்பானிதான் மோடியோட டாடியா?" - சுவர் விளம்பரத்தைப் பார்த்துக் கேட்கும் அப்பாவி மக்கள் Sponsored
 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் செய்திருக்கும் நவீன பாணியிலான சுவர் விளம்பரங்கள்ஆலங்குடி நகர மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் 14-வது மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. இதில் முத்தரசன், சி.மகேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த மாவட்ட மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு அம்சம்தான் சுவர் விளம்பரங்கள். பொதுவாகவே,சுவர் விளம்பரங்கள், பேனர்கள் போன்றவற்றை வித்தியாசமான கோணங்களில் வடிவமைப்பதில் இரண்டு பொதுவுடமைக் கட்சிகளையும் அடித்துக்கொள்ள முடியாது. 

அந்தவகையில், ஆலங்குடியிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் செய்யும் சுவர் விளம்பரங்கள் களைக்கட்டுகின்றன. இந்தமுறை புது யுக்தியோடு அந்த சுவர் விளம்பரங்கள் வடிவமைத்திருக்கிறார்கள். இதனால், அதனைக் கடந்தும் செல்லும் அத்துனை பேர்களுமே நின்று அதனை கவனித்துச் செல்கிறார்கள்.

Sponsored


அப்படி என்ன புது யுக்தி என்கிறீர்களா? மாநாடு குறித்த விபரங்களை பெரிய, நீண்ட சுவர்களில் எழுதிவிட்டு,அதன் இடது,வலது, பக்கங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தையும், மத்திய அரசாங்கம் எப்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்குழந்தையாக மாறிவிட்டன என்கிற நிலைமையையும் விவரிக்கும் சிறு வண்ண பேனர்களை பொருத்தி, அதன் நான்கு பகுதியையும் பெயிண்ட்டினால் கோடுபோட்டு மறைத்திருக்கிறார்கள். சட்டென்று பார்க்கும்போது,அது ஒரு ஓவியம் போன்றே தெரிகின்றது.

Sponsored


இந்த யுக்தி தான் மக்களை ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. இதில், சுவாரஸ்யமான அம்சமும் ஒன்று இருக்கிறது. முகேஷ் அம்பானி தன் கைகளினால் தூக்கிப்பிடிக்கும் கைப்பிள்ளையாக பிரதமர் மோடியைச் சித்தரிக்கும் படம் ஒன்று அந்த சுவர் விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதனை நின்று உற்றுக்கவனிக்கும் பாமர மக்கள், மோடியை பளிச்சென்று அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அவரை தூக்கிப் பிடிக்கும் முகேஷ் அம்பானியை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. அருகில் இருப்பவர்களிடம், "கோட்டு சூட்டு போட்டு இருக்காரே. அது யாரு?"என்று கேட்கிறார்கள். "இது தெரியாதாக்கும் உனக்கு..? அவருதான் இவரோட அப்பா" என்கிறார் அருகில் இருப்பவர் வெள்ளந்தியாக

‘’சாதாரண சுவர் விளம்பரத்தை  மக்கள் கவனித்துச் செல்லும் விளம்பரமாக மாற்றும் யுக்தியை எப்படிப் பிடித்தீர்கள்?' என்ற கேள்வியோடு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் செங்கோடனிடம் பேசினோம். "இந்த மாவட்ட மாநாடு விவசாயிகள் பிரச்னையைப் பிரதானமாக கையிலெடுத்து முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது. இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தோம். வழக்கமான முறையில் சுவர் விளம்பரம் மட்டுமே செய்யாமல், இணையதளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த,பேசும் படங்களையும் அத்துடன் பொருத்தலாம் என்று முடிவு செய்து, அதையே செயல்படுத்தினோம். முகேஷ் அம்பானி தூக்கிப் பிடிக்கும் குழந்தையாக மோடி இருக்கும் படமும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சோகம் குறித்து சித்தரிக்கும் படமும் இணையதளத்திலிருந்து எடுத்து, நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். இந்தப் பகுதியில் உள்ள விவசாய மக்கள் அந்த சுவர் விளம்பரங்களைப் பார்த்துவிட்டு எங்களுடன் பேசுகிறார்கள். மாநாட்டுக்கு வருவதாகவும் கூறுகிறார்கள். பாமர மக்கள் சிலர்,'மோடியை தூக்கிப்பிடித்திருக்கும் முகேஷ் அம்பானி பற்றி கேட்கிறார்கள்.அவர்களுக்கு நான் விளக்கமும் தருகிறேன்" என்றார்.Trending Articles

Sponsored