`அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்து எதற்கு?' கொந்தளிக்கும் விவசாயிகள்Sponsored120-க்கும் மேற்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டும் ஒரு பயனுமில்லை என்று விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு 120-க்கும் மேற்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளுக்கு உதவாமல் வியாபாரிகளுக்குப் பயன்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து விவசாயிகளிடம் பேசியபோது, ''அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக நெல் மூட்டைகள் எடுத்துச் சென்றால் அதை ஊழியர்கள் வாங்க மறுக்கிறார்கள்.  அதனால், நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதும், திரும்பி வருவதும் அல்லது அங்கேயே அடுக்கி வைத்து பாதுகாத்துக் கிடப்பதும் விவசாயிகளின் வேலையாக இருக்கிறது. அடுத்து கொண்டுச் செல்லும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவிகிதம் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வயலில் அறுவடை செய்த நெல்லை எடுத்துச் செல்லும் விவசாயிக்கு அதன் ஈரப்பதத்தின் தன்மை தெரிவதில்லை. இதன் காரணமாகவும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்லுக்கு கூடுதல் கமிஷன் தொகை பெறப்படுவதைத் தடுக்கும் வகையில்தான் தமிழக அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும்போதே மூட்டைக்கு ரூ.30 வரை வசூலிக்கப்படுகிறது.

இதைவிட நெல் வியாபாரிகள் மூட்டைக்கு ரூ.50 தருவதால் விவசாயிகள் பெயரில் அவர்கள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முன்னுரிமை தரப்படுகிறது. இதனால் விவசாயிகள் வீண் அலைச்சலைத் தவிர்க்கும் பொருட்டு வியாபரிகளிடமே நெல்லை குறைந்த விலைக்குக் கொடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இத்தனை சிரமங்களையும் தாண்டி விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் நெல்லுக்கு வங்கி மூலம் பணம் வழங்கப்படுகிறது. இந்தப் பணம் உரிய காலத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு வருவதில்லை. இதனால், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய கொள்முதல் நிலையங்களுக்கு அலையாய் அலைந்தபின் பணத்தைப் பெறுவதற்கு வங்கிக்கும் வீட்டுக்குமாய் அலைய வேண்டியிருக்கிறது. ஆக, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக உதவும்படி அமையவில்லை” என்கிறார்கள்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored