`தமிழிலேயே பேசுவோம்' - சர்வதேசத் தாய்மொழி நாளில் உறுதிமொழி எடுத்த தமிழ் அமைப்புகள்



"தமிழிலேயே பேசுவோம். தமிழிலேயே எழுதுவோம். குழந்தைகளையும் தமிழிலேயே பேச வைப்போம். அவர்களுக்கு தமிழிலேயே பெயர் வைப்போம்" என்று கரூரில் தமிழ் அமைப்புகள் கூட்டமைப்பினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சர்வதேசத் தாய்மொழி நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, கரூரைச் சேர்ந்த தமிழ் அமைப்பின் கூட்டமைப்பினர் 30-க்கும் மேற்பட்டோர், கரூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பழங்கால புலவர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் ஸ்தூபி முன்பு கூடினர். அப்போது, அந்த ஸ்தூபிக்கு மாலை அணிவித்தவர்கள், அந்த நினைவுத் தூணுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அதோடு, அவர்கள் தமிழுக்கு

ஆற்றிய அரும்பெருஞ் சாதனைகளை நினைத்து ஒரு நிமிடம் கண் மூடி நினைவுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தீரன் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் தமிழ்ச்சேரன் நம்மிடம், "தமிழை போல் தொன்மை, பழமை வாய்ந்த மொழியை நாம் போற்றிப் பாதுகாக்க முனைவதில்லை. மாறாக, ஆங்கில மோகம் கொண்டு திரிகிறோம். குழந்தைகளையும் ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் பள்ளிகளில் சேர்த்து, படிக்க வைத்து பரவசம் அடைகிறோம். இதனால், குழந்தைகளிடம் அன்னை மொழியை அந்நிய மொழியாக்குகிறோம். தமிழை வியாபாரமாக்குபவர்கள், தமிழை வைத்து அரசியல் செய்பவர்கள்கூட தமிழைப் பேணிக் காக்க முயல்வதில்லை. அதனால்தான், கரூரில் உள்ள சில அமைப்புகள் சேர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக இப்படி இந்தப் புலவர்கள் ஸ்தூபி முன்பாக உலகத் தாய்மொழி நாளில், 'நம் தாய்மொழியிலேயே பேசுவது, எழுதுவது, குழந்தைகளுக்குப் பேர் வைப்பது, குழந்தைகளைப் பேச வைப்பது என்று செயல்பட்டுக்கிட்டு இருக்கோம். சொன்னதோடு மட்டும் நிற்காமல், குழந்தைகளுக்குத் தமிழ் பெயர்களைத்தான் வைக்கிறோம். மற்றவர்களையும் வைக்க வலியுறுத்துகிறோம். தமிழை காக்க முயலவில்லை என்றால், தமிழ்ச் சமூகத்தின் வரலாறுகளும் நீர்த்துப்போகும் அபாயம் ஏற்படும்" என்று எச்சரித்தார்.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored