"புதுக்கோட்டையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தோம்!" - நக்சலைட் தம்பதி வாக்குமூலம்Sponsored கடந்த 21-ம் தேதி, திருவள்ளூர் அருகே துப்பாக்கிமுனையில் கைதுசெய்யப்பட்ட   நக்சலைட் தம்பதியை போலீஸார் கைதுசெய்து, அவர்கள் தங்கியிருந்ததாகக் கூறிய புதுக்கோட்டையில் உள்ள  திருக்கோகர்ணம் பகுதிக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். இதனால்,பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி என்ற  கிராமத்தில் வசிப்பவர், வெற்றி வீர பாண்டியன். இவரது வீட்டில், நக்சலைட்டுகள் சிலர் கூடி ரகசிய ஆலோசனை  நடத்துவதாக, திருவள்ளூர்  மாவட்ட போலீஸாருக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி ரகசியத்  தகவல் வந்திருக்கிறது. இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் அந்த வீட்டை ரகசியமாகக் கண்காணித்துவந்தனர். தகவல் உண்மை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, போலீஸ் படை  வெற்றி வீரபாண்டியன் வீட்டுக்குள்  நுழைந்தது. அங்கு, வெற்றி வீரபாண்டியன் மட்டும்  இருந்திருக்கிறார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவரது தம்பி தசரதன் மற்றும் தசரதனின் மனைவி செண்பகவள்ளி ஆகியோர்தான் நக்சலைட் என்பது தெரியவந்திருக்கிறது. வெற்றி வீரபாண்டியன் அளித்த தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும்  மைக்கில் தகவல் தெரிவிவிக்கப்பட்டு, முக்கிய இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது, திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பகுதியில்  நக்சலைட் தசரதன், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோரை அந்தப் பகுதி போலீஸார் கைதுசெய்தனர்.  இதனிடையே, தசரதனின் அண்ணன் வெற்றி வீரபாண்டியனையும் போலீஸார் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

மூவரிடமும் நடத்திய விசாரணையில், தசரதனும் செண்பகவள்ளியும் கடந்த  3 மாதங்களுக்கு  முன், புதுக்கோட்டை அருகில் உள்ள  திருக்கோகர்ணம்  கோவில்பட்டி சாலையில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்த விஷயம் தெரியவந்தது. அந்தச் சமயத்தில்,  தசரதன் பெயின்ட்டராகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்ததாகவும், நர்ஸிங் படித்த செண்பகவள்ளி  எந்த வேலைக்கும் செல்லாமல்  வீட்டில் தங்கியிருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதை உறுதிப்படுத்திக்கொள்ள, திருவள்ளூர் போலீஸார் நேற்று (22.02..2018) காலை,  தனி வாகனங்களில்  பலத்த பாதுகாப்புடன்  திருவள்ளூரிலிருந்து  புதுக்கோட்டைக்கு   அழைத்து வந்தனர். அவர்கள் வந்தபோது, இரவு 11 மணியைக் கடந்துவிட்டது. ஆனாலும், அந்த நக்சலைட் தம்பதியர் தாங்கள் தங்கியிருந்த வீட்டை போலீஸாருக்குக் காண்பித்தனர். அந்த வீட்டின் உரிமையாளரிடம்  போலீஸார் விசாரணை செய்தனர். அவர்கள் தங்கியிருந்ததை உறுதிப்படுத்திய உரிமையாளர், அவர்கள் நக்சலைட் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் கூறி இருக்கிறார். இரவு வெகுநேரமாகிவிட்டபடியால். மறுநாள் விசாரணை செய்துகொள்ளும் முடிவில் புதுக்கோட்டை.நகரில் தங்கியுள்ளனர். மூன்று நக்சலைட்டுகளும் பலத்தக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையிலான 30 போலீஸார் வந்துள்ளனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored