காவலர்கள் தற்கொலை முயற்சி விவகாரம்..! தேனி மாவட்டக் கண்காணிப்பாளர் விளக்கம்Sponsoredசென்னை டி.ஜி.பி அலுவலகத்தில், இன்று கணேசன் மற்றும் ரகு என்ற இரு ஆயுதப்படை காவலர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, 'தீக்குளிக்க முயன்ற கணேஷ் மற்றும் ரகு என்ற இரு காவலர்களும், பணியில் ஒழுக்கமின்மையாக இருந்ததாலே டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டனர். காவலர் கணேஷ், 7 முறை தவறு செய்ததாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரகு என்பவர் சென்னையில் ஒரு முறை தவறு செய்ததாக நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இதே போல் தேனியிலும் தொடர் ஒழுக்கமின்மையாக நடந்துகொண்டதால்தான் கடந்த 21/2/2018 அன்று ராமநாதபுரத்திற்கு பணிஇடமாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக, காவலர் கணேஷ், கைதி ஒருவரை சிறைக்கு அழைத்துச்சென்றார். சிறையில் கைதியை பரிசோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது. இதற்கு காவலர் கணேஷ்தான் காரணம் எனச் சிறைக் கண்காணிப்பாளர் புகார் தெரிவித்தார். அதே போல், காவலர் ரகு, சீருடையில் ரேக்ளா ரேஸில் கலந்துகொண்டார். இந்த இருவரும் செய்யும் தவறுகளை உயர் அதிகாரிகள் கண்டித்தும் எந்தப் பலனும் இல்லை. அதனாலேயே பணிஇட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் தவறும் ஒழுக்கமின்மையும் இதற்கு காரணம். வேறு எந்த வித காரணமும் இல்லை" என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored