பெரியார் சிலையை உடைத்தவர் மனநோயாளியா? - ஆதாரத்தைக் காட்டியது போலீஸ்Sponsoredபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், பெரியார் சிலையை உடைத்ததாக  மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த  தலைமைக் காவலர் செந்தில் குமார்  என்பவரை, கடந்த 20-தேதி இரவு ஆலங்குடி போலீஸ் கைது செய்தது. இப்போது, அவர் ஒரு மனநோயாளி என்றும் அதற்கான சிகிச்சையை சில மாதங்களாக  ஹைதராபாத்தில் எடுத்துவருகிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்களையும் காவல்துறை திரட்டியுள்ளது.


புதுக்கோட்டை ஆலங்குடி அருகிலுள்ள புதுக்கோட்டை விடுதியில், பெரியார் சிலையை உடைத்த விவகாரம், தமிழ்நாடு மட்டுமல்லாது டெல்லி வரை அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில், சிலையை உடைத்தவர் ஒரு தலைமைக் காவலர் என்பதும்,  சத்தீஸ்கர் மாநில CRPF-ல் பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது. தகவல் அறிந்து, திருச்சி டிஐஜி லலிதா லெட்சுமி நேரடியாக ஆலங்குடிக்கு வந்து, செந்தில்குமாரிடம்  பல மணி நேரம் விசாரணை செய்தார். ஒருகட்டத்தில், அவரிடமே மது வாங்கித் தரும்படி செந்தில்குமார் கெஞ்சியிருக்கிறார். இதனால் அதிர்ந்துபோனாராம் டிஐஜி. எஸ்பி-யிடம் செந்தில்குமார் பற்றி கூடுதலாக விசாரிக்கும்படி கூறிவிட்டுப் புறப்பட்டிருக்கிறார். 'சிலையைத் தான்தான் உடைத்தேன்' என்று போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்ததால், அவரைக் கைதுசெய்து, மறுநாள் ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நடுவர் வேதகலா, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Sponsored


Sponsored


இந்நிலையில்தான், "அவர் மன நோயாளி. அதற்கான மருத்துமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். அவர், பெரியார் சிலையை வேண்டுமென்றே உடைக்கவில்லை. எனவே, அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று செந்தில் குமாரின் தாயார் மல்லிகாவும் மனைவி பிரமிளாவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து செந்தில்குமாரின் தாயார் கூறும்போது, "என் மகன்  குற்றம் செய்யவில்லை. விடுமுறைக்காக ஊருக்கு வந்தவன் மதுவுக்கு அடிமையாகிவிட்டான். அடிக்கடி  புதுக்கோட்டை விடுதியில் உள்ள மதுபானக் கடைக்கு அவன் போவான். குடித்துவிட்டு வீட்டில் வந்து ரகளை பண்ணுவான். குடிக்காமல் அவனால் இருக்கமுடியாத அளவுக்கு போய்விட்டான். அவன் இந்த அளவுக்கு குடிக்கக் காரணம், அவன் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததுதான். அதிலிருந்து தப்பிக்க குடிக்கு அடிமையாகிவிட்டான். இதற்காக, ஹைதராபாத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை   அளிக்கப்பட்டுவருகிறது.  அதற்கான ஆதாரமும்  எங்களிடம் உள்ளது. என் மகன் திட்டமிட்டோ, கலவரத்தைத் தூண்டும் நோக்கத்திலோ பெரியார் சிலையை உடைத்திருக்க மாட்டான். அவன் அந்தச் செயலை செய்திருக்கவும் வாய்ப்பில்லை.  தமிழக முதல்வர் என் மகனின் நிலைமையைப் புரிந்துகொண்டு, இப்பிரச்னையில் தலையிட்டு, என் மகனை விடுவிக்க வேண்டும்" என்று  கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கொடுத்த தகவலின் பேரில், சத்தீஸ்கர் மாநில சி.ஆர்.பி.ஃஎப். அதிகாரிகள் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது.Trending Articles

Sponsored