இல்லத்தரசிகளுக்கான வீக் எண்ட் அழகுக் குறிப்புகள்! #BeautyTipsSponsoredஇல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி, வேலைப் பார்க்கும் பெண்களாக இருந்தாலும் சரி... வீக் எண்ட்டிலாவது உங்கள் உடல்நலனிலும், அழகிலும் அக்கறை கொள்ளவேண்டும். இதோ உங்களுக்கான அழகுக் குறிப்புகள் பற்றிச் சொல்கிறார் பியூட்டிஷியன் மோனிஷா பிரசாந்த்.

தலைக்குப் பாதாம் ஆயில் பாத்!
சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் விடுமுறை கிடைத்தாலும் சரி, ஞாயிறு அன்றுமட்டும் விடுமுறை கிடைத்தாலும் சரி, காலையில் எழுந்ததும் பாதாம் எண்ணெய்யைத் தலைமுடியின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரை தடவி  ஊற விடுங்கள். 

Sponsored


Sponsored


பப்பாளி ஃபேஷியல்!
தலையில் எண்ணெய் ஊறுகிற அதே நேரம், பப்பாளிப் பழம் அல்லது அதன் தோலை முகத்தில் தடவி, கால் மணி நேரம் ஊற விடுங்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு விருப்பமான காபியோ, டீயோ போட்டுக் குடித்து ஃபிரெஷ்ஷாகுங்கள்.

பாசிப்பருப்பு பேக்!
உங்கள் சருமம் வறண்டது என்றால், சிறிதளவு பாசிப்பருப்பு மாவு, பாலேடு இரண்டையும் கலந்து பேக்காக போட்டுக்கொண்டு (பப்பாளி பேக் மீது) 15 நிமிடம் ஊற விடுங்கள். பிறகு, தாடையிலிருந்து மேல்நோக்கி விரல்களால் வட்ட வட்டமாகத் தேய்த்துவிட்டு, ஈரத் துணியால் முகத்தை அழுந்தத் துடைத்தெடுங்கள். முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகம் பளிச்சென்றாகும். ஃபேஷியல் செய்தது போன்ற உணர்வும் உங்களுக்குக் கிடைத்துவிடும். 

அன்னாசிப்பழ பேக்!
உங்கள் சருமம் எண்ணெய்ப் பசை கொண்டது என்றால், ஒரு துண்டு பப்பாளி, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, 4 சொட்டு தேன் சேர்த்துக் கலந்து  கொள்ளுங்கள். ஏற்கெனவே பப்பாளிப் பழ பேக் போட்டு வைத்துள்ள முகத்தில், இந்த அன்னாசிக் கலவையை தடவி, கால் மணி நேரம் காய விடுங்கள்.  பிறகு, முகத்தைக் கீழிருந்து மேலாக வட்ட வட்டமாகத் தேய்த்துவிட்டு, ஈரத் துணியால் முகத்தை அழுந்தத் துடைத்து எடுங்கள். இறந்த செல்கள் அனைத்தும் போய்விடும். முகம் பளிச்சென்றாகி விடும்.

பாடி மசாஜ்!
இப்போது உடம்புக்குக் கவனம் கொடுக்க வேண்டிய நேரம். முடிந்தால் உடம்பு முழுக்க பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்யைத் தடவிக்கொண்டு குளியலறைக்குள் பத்து நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்து இருங்கள். பிறகு, வீட்டில் அரைத்த சீயக்காய் பொடியை அரிசிக் கஞ்சியில் கலந்து (முந்தைய நாளே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்) தலையில் அழுந்தத் தேய்த்து குளித்துவிடுங்கள். அடுத்து, கடலை மாவுடன் தயிரைக் கலந்து உடம்பு முழுக்கத் தடவி, கீழிருந்து மேலாகத் தேய்த்து தேய்த்து, இறந்த செல்களை எல்லாம் எடுத்துவிடுங்கள். உடம்பு வழு வழுவென்று ஆகி விடும். 

ரோஜாக் குளியல்!
வாரம் முழுக்க சாமிப்படங்களுக்குப் போட்ட ரோஜாப்பூக்களை முந்தைய இரவே தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். புதுப் பூவையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தத் தண்ணீரை வடிகட்டிக் குளித்து முடித்ததும் தலை முதல் பாதம் வரை ஊற்றிக் குளியுங்கள். ஒரு ரூபாய்கூட செலவில்லாத ஸ்பா இதுதான். 

கால் அழகு!
 உங்கள் குளியலறையில் பியூமிக் ஸ்டோன் கட்டாயம் இருக்கட்டும். குளிக்கும்போதே பியூமிக்ஸ் ஸ்டோனால் பாத ஓரங்களை நன்கு தேய்த்தெடுங்கள். பாதவெடிப்பு எளிதில் மறைந்துபோகும்.

கை அழகு!
குளித்து முடித்தவுடன் நகங்களைக் கட் செய்து ஷேப் செய்துகொள்ளுங்கள். பிறகு நெயில் பாலீஷ் போட்டால் விரல்கள் ஜொலிஜொலிக்கும். 

கூந்தல் அழகு!
குளித்து முடித்ததும் முடியைக் காயவிடுங்கள். காய்ந்ததும், அடிப்பகுதியை லேசாக ட்ரிம் செய்துவிடுங்கள். ஒவ்வொரு வார முடிவிலும் முடியை ட்ரிம் செய்தால் உங்கள் வெடிப்பில்லாத முடிவளர்ச்சிக்கு கேரன்டி.  

இதையெல்லாம் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து செய்துவந்தாலே உங்கள் சருமம் உங்களைக் கொண்டாடும்.Trending Articles

Sponsored