மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படவில்லை..! கல்வி அலுவலரிடம் புகார் 

எங்க ஊர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரண்டு வருஷமா மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கவில்லை. பள்ளியில் பல தடவை சொல்லியும், அவங்க இதை கண்டுக்கலை என்று ஆவேசப்படுகிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன்.

Sponsored


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்குக் கடந்த இரண்டு வருடங்களாக உதவித்தொகை தரவில்லை. ஆனால், அதன் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவித்தொகை வழங்கப்பட்டது. லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், இரண்டு வருடங்களாக தரப்படாத கல்வி உதவித்தொகையை உடனே வழங்கக் கோரி, அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வள்ளிராஜனிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார். 

Sponsored


இதுபற்றி அவரிடமே கேட்டபோது, `இந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அதனால், தங்கள் பிள்ளைகளை அவர்கள் அரசுப் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாகப் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை தரவில்லை பள்ளி நிர்வாகம். ஆனால், அருகில் உள்ள பள்ளிகளில் எல்லாம் மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை வழங்கிவிட்டார்கள். இந்தப் பள்ளியில் மட்டும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்காதது சந்தேகமா இருக்கு. ஆசிரியர்களே அந்தப் பணத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. அதனால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறேன். அவரிடம், `லாலாப்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளி உதவித்தொகை பெறுவதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறேன். நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். மாவட்ட நிர்வாகமும் பள்ளி மாணவர்கள் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டும்' என்று தெரிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored