பாரதிய ஜனதா கட்சி வருவாய் 81 சதவிகிதம் உயர்வு!Sponsoredபாரதிய ஜனதா கட்சியின் வருவாய் 81 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக ஜனநாயகச் சீர்திருத்த மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 2016-17 நிதியாண்டில் ரூ. 1,034 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி பதவியேற்கும் சமயத்தில் அந்தக் கட்சியின் வருவாய் ரூ.463.41 கோடியாக இருந்தது. 2015-16 ம் ஆண்டு ரூ. 570.86 கோடியாக வருமானம் உயர்ந்து, கடந்த நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் அபரிமிதமாக உயர்ந்துள்ளது. 

காங்கிரஸ் கட்சி 14 சதவிகித வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இந்தக் கட்சிக்கு ரூ. 225.36 வருமானம் கிடைத்துள்ளது. 2015-16 நிதியாண்டில் 261.56 கோடி வருமானம் பெற்ற காங்கிரஸ் 2017-ம் ஆண்டு ரூ. 36 கோடியை இழந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி ரூ. 710.57 கோடி செலவு கணக்குக் காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ. 321. 66 கோடி செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது. 

Sponsored


பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட்( மார்க்ஸிஸ்ட் ) இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் ஆகிய 7 தேசியக் கட்சிகள் 2017-ம் ஆண்டு 1,559.17 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளன. ரூ. 1,228.26 கோடி செலவாகக் காட்டியுள்ளன. அரசியல் கட்சிகள் நன்கொடை. வழியாகவும் அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள், புத்தகங்கள் விற்பனை மூலமாகவும் வருமானம் ஈட்டுகின்றன.

Sponsored
Trending Articles

Sponsored