யோகா போட்டிக்கு சிங்கப்பூர் செல்ல உதவியில்லாமல் தவிக்கும் கிராமத்து மாணவன்! 



யோகாவில் பல சாதனைகளைச் செய்துவரும் மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள  சந்தையூர் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் வீரபாண்டி, சிங்கப்பூரில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ள நிலையில்,  பொருளாதார வசதி இல்லாமல் தவித்துவருகிறார்.

Sponsored



மதுரை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ளது, சந்தையூர் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவரும் வீரபாண்டி, யோகா ஆசிரியரான ரமேஷிடம் சிறு வயதிலிருந்தே யோகா கற்று, அதில் பல சாதனைகளைச் செய்துவருகிறார். மதுரை மாவட்ட அளவில் நடந்த யோகா போட்டியில் முதலிடமும், திருச்சியில்  கலை பண்பாட்டுத் துறை - ருத்ர சாந்தி யோகாலயம் இணைந்து நடத்திய போட்டியில், 10 ஆசனங்களில் இரண்டாமிடமும் வந்தார். அது மட்டுமில்லாமல் திருச்சியில் நடந்த போட்டியில் ஆணிப்படுக்கையில் 30 நிமிடங்களில் நூறு ஆசனங்களைச் செய்து, புதிய உலக சாதனை படைத்தார்.

Sponsored


Sponsored


புதுச்சேரியில், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை சார்பில் நடந்த தேசியப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து, சிங்கப்பூரில் நடைபெறும் யோகா மாநாட்டைஒட்டி நடைபெறும் யோகா போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். வரும் ஜூன் 15 முதல்  18-ம் தேதி வரை நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளார். ஆனால், கூலி வேலை செய்யும் வீரபாண்டியின் பெற்றோரால் சிங்கப்பூருக்கு அனுப்புவதற்கு பொருளாதரா வசதி இல்லை. ''கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, சிறு வயதிலேயே உலக அளவில் நடைபெறும் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைப்பது அரிதானது. அந்தச் சாதனையை வீரபாண்டி செய்துள்ளார். இன்னும் பல சாதனைகள் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அதற்கான உதவிகளை யார் செய்வார் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. சிங்கப்பூரில் நடைபெறும் போட்டியில் வீரபாண்டி கலந்துகொள்ள, நல்உள்ளம் கொண்டோர் உதவி செய்தால் நன்றாக இருக்கும்'' என்றனர் அவரது பெற்றோர்.

இதே பள்ளியில் வீரபாண்டி போலவே பல மாணவர்கள் யோகாவில் சாதனை செய்து, அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள் 



Trending Articles

Sponsored