ஐ.ஐ.டி - ஜே.இ.இ முதன்மைத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சி... ஏன்? #IITSponsoredஐ.ஐ.டி - ஜே.இ.இ (IIT - JEE main Exam) முதன்மைத் தேர்வின் கேள்விகளும், ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார்ப் பயிற்சி மையத்தின் மாதிரி கேள்வித்தாளின் கேள்விகளும் ஒரே மாதிரியாக இருந்ததால், நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்!

பொறியியல் படிப்புக்குப் பிரபலமான ஐ.ஐ.டி-யிலும், தேசியத் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் சேர, கடந்த வாரம் ஜே.இ.இ முதன்மை நுழைவுத்தேர்வு நடந்தது. இந்தத் தேர்வை, இந்தியா முழுவதும் 112 நகரங்களில் 1,613 தேர்வு மையங்களில் 10.43 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வில், இயற்பியல் பாட கேள்விகளும், ஹைதராபாத்தைச் சேர்ந்த பயிற்சி மையம் நடத்திய மாதிரித் தேர்வுக் கேள்விகளும் ஒரே மாதிரியாக இருந்தன. இந்த விஷயம், கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Sponsored


ஒரே மாதிரியான கேள்விகள் இடம்பெற்றிருப்பது குறித்து, ஐ.ஐ.டி - ஜே.இ.இ முதன்மை நுழைவுத்தேர்வை நடத்தும் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ (CBSE), ``இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு'' எனத் தெரிவித்துள்ளது. 

Sponsored


``ஐ.ஐ.டி - ஜே.இ.இ முதன்மைத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஏழு அல்லது எட்டுக் கேள்விகள் மட்டுமே தனியார்ப் பயிற்சி மையம் நடத்திய மாதிரித் தேர்வின் கேள்விகளோடு ஒத்துப்போகின்றன. ஆனால், நாங்கள் முதன்மைத் தேர்வுக்கான கேள்விகளை இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் தயாரித்தோம். இதை இரண்டு வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட மாதிரி கேள்வித்தாளுடன் ஒப்பிடக் கூடாது'' என்று கருத்துத் தெரிவித்துள்ளது சி.பி.எஸ்.இ. 

மேலும், ``ஐ.ஐ.டி - ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கு 100 பேர்கொண்ட நிபுணர்கள் கேள்வித்தாளைத் தயாரிக்கின்றனர். இவர்கள், 1,500-க்கும் மேற்பட்ட கேள்விகளைத் தேர்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தயாரித்து வழங்குவார்கள். இவ்வாறு தயாரித்து வழங்கும்போது அந்தக் கேள்விகள் உண்மைத்தன்மைகொண்டதாகவும், சொந்தக் கையெழுத்தில் அமைந்ததாகவும் இருக்க வேண்டும். இவர்கள் தயாரித்து வழங்கும் கேள்விகளிலிருந்து 90 கேள்விகளை ரேண்டமாகத் தேர்ந்தெடுத்து, 8-9 கேள்வித்தாள்கள் தயாரிப்போம். தேர்வின்போது, இதிலிருந்து ஒன்றிரண்டு கேள்வித்தாளை ரேண்டமாக வழங்குவோம். இதனால் தனியார் பயிற்சி நிறுவனத்தின் கேள்விகளோடு ஒப்பிடக் கூடாது. எங்களின் மதிப்பை தொடர்ந்து குறைக்கும் வகையில், குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பிரச்னையைக் கிளம்புகின்றனர்" என்கிறது சி.பி.எஸ்.இ. 

இதுகுறித்து தனியார் பயிற்சி மையத்தின் நிர்வாகியிடம் பேசியபோது... ``மாதிரித் தேர்வுகளை அதிகளவில் நடத்தியே மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குகிறோம். நாங்கள் நடத்தும் மாதிரித் தேர்வின் கேள்விகள் ஒன்றிரண்டு ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் இடம்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு ஏழு, எட்டுக் கேள்விகள் இடம்பிடித்திருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இந்த ஆண்டு மாதிரி வினாத்தாளில் அதிகக் கேள்விகள் கேட்டிருப்பதால், இனிவரும் காலங்களில் மாணவர்கள் குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் அதிக அளவில் சேரவும், மாதிரித் தேர்வுகள் எழுதவும் ஆர்வம்காட்டுவார்கள். இது ஆரோக்கியமான போக்கு அல்ல. இந்த நிலை மாற்றி அமைக்கவேண்டியது அவசியம்" என்றார்.

ப்ளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு கேள்வித்தாள்கள் வெளியான விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்களும், தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தனியார்ப் பயிற்சி மையங்களின் ஆதிக்கம் அதிகரித்துவருவதையே காண்பிக்கிறது. கேள்வித்தாள் வெளியான விவரமும், நுழைவுத்தேர்வில் தனியார் பயிற்சி நிறுவனத்தின் மாதிரித் தேர்வில் கேள்விகள் இடம்பெற்ற விவகாரமும், மத்திய அரசு தனியாகத் தேர்வு அமைப்பை உருவாக்கவேண்டியது அவசியம் என்பதை வெளிப்படுத்துகின்றன. மாணவர்களின் தேர்வுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கல்வியாளர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். Trending Articles

Sponsored