கோடை முகாம் தொடங்கியது - மாணவர்களை தூதுவர்களாக நியமித்த வண்டலூர் உயிரியல் பூங்கா..!Sponsoredவன உயிரினங்கள் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாணவர்களை அம்பாசிடர்களாக நியமித்துள்ளார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 175 இனங்களில் 2,379 எண்ணிக்கையிலான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இந்த கோடை விடுமுறையில் பூங்காவிலுள்ள ஊர்வன, பாலூட்டிகள், பறவைகள் என ஒவ்வொரு உயிரினங்கள் பற்றியும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் கோடை முகாம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 11 முதல் மே 12-ம் தேதிவரை நடைபெறும் இம்முகாமில் பங்கேற்கும் மாணவர்கள் 5 குழுவாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் 4 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோடை முகாமில் இங்குள்ள உயிரினங்கள் பற்றியும், அதன் உயிரியல்பை பற்றியும் நிபுணத்துவம் பெற்றவர்கள் மாணவர்களுக்கு விளக்கினார்கள். இந்த முகாமில் பங்கு பெற்ற மாணவர்கள் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு தூதுவர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

Sponsored


Sponsored


மேலும் அவர்கள் வருடத்திற்கு 10 முறை பூங்காவிற்கு இலவசமாக வரலாம். முகாமில் கலந்து கொண்ட முதல் குழுவில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி நிறைவுவிழா இன்று நடந்தது. அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், அம்பாசிடர் பேட்ச் ஆகியவை பூங்கா நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.Trending Articles

Sponsored