இந்தியாவில் நூற்றில் 8 பேருக்கே கல்லூரியில் படிக்க வாய்ப்புக் கிடைக்கிறது! - சைலேந்திர பாபு வேதனைSponsored`இந்தியாவில் பள்ளிப்படிப்பு படித்த பிறகு, 100 பேரில் 8 பேருக்குதான் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது’ என ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு வேதனையுடன் தெரிவித்தார்.

நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடந்த வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ரயில்வேதுறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ``மாணவ, மாணவிகளை ஐ.ஏ.எஸ். ஆக்குவதற்கான பயிற்சி கடந்த 20 ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். இந்தியாவில் பள்ளிப்படிப்பு படித்த பிறகு 100 பேரில் 8 பேருக்குதான் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. 1952-ம் ஆண்டுகளில் பிசினஸுக்காக சினிமா தியேட்டர் கட்டிவந்தார்கள். ஆனால், சமுதாயத்தின்மீது அக்கறை, அன்பு உடையவர்கள் கல்லூரி கட்டினார்கள். இந்தக் கல்லூரி ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவர் சிவன், விஞ்ஞானி சிவதாணு ஆகியோரை உருவாக்கியுள்ளது. கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம் என்கிறார் 26 ஆண்டுகளை சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா. உங்கள் மனதுக்குள் நிறைய திறமைகள் உள்ளன, அதை வெளியில் கொண்டு வருவதுதான் கல்வி என்றார் சுவாமி விவேகானந்தர். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கு படிக்க ஆசை. ஸ்கூலுக்குப் போய் படித்துக்கொண்டே, பெண் குழந்தைகள் படிப்பதற்காகப் பிரசாரம் செய்கிறார். அவரை ஸ்கூலுக்குப் போகக் கூடாது, பிரசாரம் செய்யக் கூடாது என்றனர் தீவிரவாதிகள். இதனால் மலாலாவை சுட்டனர். அவரை இங்கிலாந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் காப்பாற்றினார்கள். சுட்டாலும் படிப்பேன் என்றார் மலாலா. ஆனால், இன்று பெற்றோர் படி என அடித்தாலும் பல மாணவர்களைப் படிக்கமாட்டார்கள்.

Sponsored


Sponsored


மலாலா கூறுகிறார், `உன் அப்பா, அண்ணனிடம் அனுமதி கேட்காதீர்கள். புத்தகங்களையும் பேனாவையும் கையிலெடுங்கள். அதுதான் உங்கள் ஆயுதம்' என்கிறார். வாழ்க்கையில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என இந்திரா நூயி கூறுகிறார், `வாழ்க்கை முழுவதும் மாணவர்களாகக் கல்வி கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். இதுதான் வாழ்க்கையின் வெற்றிக்கான மூன்று வழிகள்' என்கிறார் இந்திரா நூயி. கல்லூரி மாணவர்களே, உலகத் தலைவராக மாற வேண்டிய காலத்தில் நீங்கள் காலத்தை வீணாக்காதீர்கள்" என்று அவர் பேசினார். Trending Articles

Sponsored