`கைதிகளை நல்வழிப்படுத்த யோகா பயிற்சி!’ - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தகவல்



Sponsored



புதுச்சேரி சிறையில் இருக்கும் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற அரசு விழா ஒன்றில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்த அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய சிறையில் ஒரு வாரத்துக்குள் யோகா பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. கைதிகளுக்கு  மத்திய பல்கலைக்கழகத்தின் உதவியோடு மனோதத்துவ பயிற்சிகளும் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Sponsored


தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த கிரண்பேடி, “புதுச்சேரியில் நடைபெறும் குற்றங்களைக் குறைக்க சிறைத்துறை, காவல்துறை, சட்டத்துறை மற்றும் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்து பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும்போது, கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். அதேபோல ஜாமீனில் வெளியே வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றம் புரிந்தால் அவர்களுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கக் கூடாது. தண்டனை முடிந்து வெளியே வரும் குற்றவாளிகளைக் கண்காணிக்க காவல்துறையில் வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதன்மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Sponsored




Trending Articles

Sponsored