``காவிரியை விட மெரினா முக்கியமா?": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்!



தாய் காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? எனத் தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Sponsored


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மெரினாவில் 90 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அய்யாகண்ணு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, மெரினாவில் அரசின் அனுமதியுடன் கடைசியாக எப்போது போராட்டம் நடந்தது? என அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

Sponsored


இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தவிர, 2003-ம் ஆண்டுக்குப் பின்னர் மெரினாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை. அதற்கு முன் பாலகங்காதர திலக்கின் 150- வது நினைவு தினத்தையொட்டிய நிகழ்ச்சிக்கு, அரசு 1 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்ததாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில், கடந்த 2003-ம் ஆண்டு மெரினாவில் ஜெயலலிதாவின் படங்கள் எரிக்கப்பட்டதால்தான் அங்கு போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

Sponsored


இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ``தாய் காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா?. வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை தினங்களில் லட்சக்கணக்கான மக்கள் கோயில், தேவாலயங்களில் வழிபாடு செய்கின்றனர், அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறி மக்கள், அந்தப் பண்டிக்கைகளைக் கொண்டாடக் கூடாது எனக் கூற முடியுமா?. போராட்டங்களை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. போராட்டங்களைத் தடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வழங்கப்படும் எனத் தெரிவித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.



Trending Articles

Sponsored