தரையிறங்க முடியாமல் திணறிய ராகுல்காந்தி சென்ற விமானம்!



ர்நாடக தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் ஹூப்ளி நகருக்கு நேற்று பயணித்தார். விமானத்தில் ராகுல்காந்தி உடன் மேலும் 4 பேர் இருந்தனர். டெல்லியில் இருந்து இரண்டு மணி நேரத்தில் ஹூப்ளி வந்தடைந்த விமானத்தால் தரை இறங்க முடியவில்லை. மூ்னறாவது முயற்சியில்தான் விமானத்தால் தரையிறங்க முடிந்துள்ளது. இதன் பின்னணியில் சதித் திட்டம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி சந்தேகிக்கிறது. இதுதொடர்பாக கர்நாடக மாநில டி.ஐ.ஜி நில்மானி ராஜுவிடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. விமானத்தின் பைலட்டுகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Sponsored


ராகுல் காந்தி பயணித்த விமானம் ரெலிகார் ஏவியேசன் நிறுவனத்துக்குச் சொந்தமான VT- AVH,  Falcon 2000 ரகத்தைச் சேர்ந்தது.. ''விமானத்தில் உள்ள பிரச்னை குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை. விமானத்தில் ஏற்பட்ட அசவுகரியம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் காரணமாக விமானத்தில் பயணித்தவர்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டது'' என்று காங்கிரஸ் கட்சி அளித்த புகாரில் சொல்லப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ராகுல் காந்தியை தொடர்புகொண்டு இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். விரிவான விசாரணைக்கு உத்தவிடப்பட்டுள்ளது. 

Sponsored


ராகுல்காந்தியுடன் விமானத்தில் பயணித்த கௌசால் வித்யார்த்தி , 'டெல்லியில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்ட விமானம் 10.45 மணியளவில் வானத்தில் குலுங்கியது. வானிலை நல்ல முறையில் இருந்த போதிலும் விமானம் தேவையில்லாமல் குலுங்கியது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் மிகவும் பயந்து போனேன். ராகுல் காந்தி, பைலட்டுகள் சரி செய்து விடுவார்கள்  என்கிற நம்பிக்கையில் இருந்தார் '' என்று தெரிவித்துள்ளார். 

Sponsored


விமான சேவை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆட்டோ பைலட் முறையில் விமானம் தரையிறங்க முயன்றுள்ளது. ஆட்டோ பைலட் ஒத்துழைக்காத நிலையில், பைலட்டுகளே விமானத்தை தரையிறக்கினர்''  என்று கூறப்பட்டுள்ளது. 



Trending Articles

Sponsored