இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுமா சென்னை? - ஹைதராபாத்துக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு #Qualifier1



ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர்-1 போட்டியில் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

Sponsored


Photo Credit: IPL

Sponsored


கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர்கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இதில், முதல்  இரண்டு இடங்களைப் பிடித்துள்ள ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் இடையிலான குவாலிஃபையர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். தோல்வியடையும் அணி, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மோத வேண்டி வரும். இதனால், இன்றைய போட்டியில் வென்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறவே இரு அணிகளும் விரும்பும். 

Sponsored


இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணி, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது. அதேநேரம், சென்னை அணியில் சாம் பில்லிங்ஸுக்குப் பதிலாக ஷேன் வாட்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.  



Trending Articles

Sponsored