`சென்னையில் விளையாடாதது துரதிருஷ்டவசமானது!’ - தோனி நெகிழ்ச்சிSponsoredநடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை மைதானத்தில் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடதது துரதிருஷ்டவசமானது என சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்தார். 

Photo Credit: Twitter/@ChennaiIPL

Sponsored


கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில், இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி, எலிமினேட்டரில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதும் 4வது போட்டி இதுவாகும். இதுவரை நடந்த 3 போட்டிகளிலுமே சென்னை அணியே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. 

Sponsored


இந்தநிலையில், மும்பையில் போட்டிக்கு முன்னதாக இரு அணிகளின் கேப்டன்களும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். மேலும், கோப்பையுடனும் அவர்கள் போஸ் கொடுத்தனர். அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, ``இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஐபிஎல் தொடரில் களமிறங்கியதால், ஆரம்பத்தில் கொஞ்சம் உணர்ச்சிமயமாக இருந்தோம். ஆனால், ஐபிஎல் தொடர் ஆரம்பித்தவுடன் புரபஷனலாக விளையாடத் தொடங்கினோம். 

\Photo Credit: Twitter/@ChennaiIPL

சென்னை மைதானத்தில் விளையாடதது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும், அங்கு ஒரு போட்டியிலாவது விளையாட முடிந்தது மகிழ்ச்சியை அளித்தது. ஏனென்றால், அந்த ஒரு நிகழ்விற்காக ரசிகர்கள் நீண்டநாள்களாகக் காத்திருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகள் விளையாடாமல் இருந்தாலும், சென்னை அணிக்கான ரசிகர்கள் பெருகிக் கொண்டே இருந்தனர். சென்னை அணி மீண்டும் களமிறங்கி சிறப்பாக விளையாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சென்னையில் விளையாடதது துரதிருஷ்டவசமானது. டி20 போன்ற பார்மாட்டில் அணிக்குத் தேவைப்படும்போது ஒவ்வொரு வீரரரும், தங்களை பொறுப்பை உணர்ந்து விளையாடுவது அவசியம். ஒரு அணியாகச் சிறப்பாகச் செயல்படுவது அவசியம்தான். ஆனால், தனி ஒரு வீரராக எதிரணியின் வெற்றியைத் தட்டிப் பறித்து, மற்ற வீரர்களின் சுமையைக் குறைப்பதும் முக்கியமானது’’ என்று பேசினார். 
 Trending Articles

Sponsored