`வில்லியம்சன், யூசுஃப் பதான் அசத்தல்!’ - இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!Sponsoredஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், சென்னை அணி கோப்பையை வெல்ல 179 ரன்களை இலக்காக நிர்ணைத்துள்ளது ஹைதராபாத் அணி.

Photo:IPL/Twitter

Sponsored


மும்பை வான்கடே மைதானத்தில், சென்னை ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் 2018 -ன் இறுதிப் போட்டி நடந்துவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஃபீல்டிங்கை தேர்வுசெய்தார். சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஹர்பஜன் சிங்குக்குப் பதிலாக கரண் ஷர்மா சேர்க்கப்பட்டிருந்தார். ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் கோஸ்வாமி களமிறங்கினர். தீபக் சகார் மற்றும் இங்கிடி, சிறப்பாகப் பந்து வீசினர். கோஸ்வாமி, 5 ரன்னில் ரன் அவுட் ஆனார். பின்னர் தவான், கேப்டன் வில்லியம்சனுடன் இணைந்தார். இந்த இருவரும் மோசமான பந்துகளை பவுண்டரி சிக்சர் என அடித்தனர். இதனால், அந்த அணியின் ரன் ரேட்டும் மெதுவாக உயர்ந்தது. 

Sponsored


தவான், ஜடேஜா பந்தில் போல்டு ஆனார். அவர், 26 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய ஷகிப் அல் ஹசன், துவக்கம் முதலே அதிரடியில் இறங்கினார். வில்லியம்சன், கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷகில் அல் ஹசனும் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹூடா 3 ரன்னில் ஆட்டமிழக்க, ப்ரத்வைட் களமிறங்கினார்.  யூசஃப் பதான் அதிரடியாக விளையாடி, 25 பந்தில் 45  ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் இங்கிடி சிறப்பாகப் பந்துவீசி  4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். சென்னை அணி கோப்பையை வெல்ல ஹைதராபாத் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. Trending Articles

Sponsored